மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
Salman Khan: சல்மான் கான் வீட்டு பால்கனிக்கு குண்டு துளைக்காத கண்ணாடி.. அதிகரிக்கும் பாதுகாப்பு
பாலிவுட் நடிகர் சல்மான் கான் ராஜஸ்தானில் அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதற்காக அவருக்கு டெல்லியைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. அவனது ஆள்கள் சல்மான் கானை கொலை செய்ய முயற்சியும் செய்தனர். சல்மான் கான் மும்பை புறநகரில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு செல்லும்போது அவரை வழிமறித்து கொலை செய்ய திட்டமிட்ட 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சல்மான் கானின் வீட்டின் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இச்சம்பவங்களை தொடர்ந்து சல்மான் கானுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் வெளியில் எங்கு சென்றாலும் குண்டு துளைக்காத காரில்தான் செல்கிறார். அதோடு வெளியில் அதிக அளவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் சல்மான் கான் குறைத்துக்கொண்டுள்ளார்.
தற்போது சல்மான் கான் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டு பால்கனி பகுதிக்கு குண்டு துளைக்காத கண்ணாடியை பொருத்தி இருக்கிறார். அந்த பால்கனியில் இருந்துதான் தனது ரசிகர்களை சல்மான் கான் பார்ப்பது வழக்கம். அதோடு, வெளியில் நடப்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள சல்மான் கான் தனது வீட்டு வளாகத்தில் அதிநவீன கண்காணிப்பு கேமராவும் பொருத்தி இருக்கிறார். கட்டிடத்தை சுற்றி இரும்பு முள்வேலியும் போடப்பட்டுள்ளது.
அதோடு சல்மான் கான் வீட்டிற்கு வெளியில் 24 மணி நேரமும் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். சல்மான் கானுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதால் அவரது நெருங்கிய நண்பர் பாபா சித்திக்கை லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் சுட்டுக்கொலை செய்தனர். அதனை தொடர்ந்தே இப்பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.