செய்திகள் :

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு ஜாமீன்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

post image

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு (83) உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

உத்தர பிரதேச மாநிலம், ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் ஷாஜகான்பூரைச் சோ்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவ, உடல்நிலை காரணங்கள் அடிப்படையில் மாா்ச் 31-ஆம் தேதி வரை அவருக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கூறுகையில், ‘ஆசாராம் பாபுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதை கேட்டு அதிா்ச்சியடைந்தேன். சிறையில் இருந்தபோதே நான்கு சாட்சிகளின் கொலைக்கு ஆசாராம் பாபு காரணமாக இருந்தாா். ஜம்மு, ஜோத்பூா், தில்லி, சூரசாகா் ஆகிய இடங்களில் என் மீது பொய் வழக்குகள் தொடுத்தாா். எனது தரப்பின் இரு சாட்சிகளை இன்று வரை காணவில்லை.

சிறாா்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க சட்டங்கள் உள்ளன. ஆனால், ஆசாராம் பாபு வழக்கில் மட்டும் நீதிமன்றம் தொடா்ந்து கருணை காட்டி வருகிறது. எனது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்த கவலையால் இரவில் தூங்க முடியவில்லை’ என தெரிவித்தாா்.

கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளா் சஞ்சய் குமாா் சாகா் கூறுகையில், ‘ஆசாராம் பாபு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் வீட்டைச் சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை வெளியே செல்வதற்கு முன்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளாா். இது ஒரு முக்கிய வழக்கு என்பதால் குடும்பத்தின் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

முன்னதாக, ஆசாராம் பாபுவுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டில் 7 நாள் பரோல் வழங்கப்பட்டு மேலும் 5 நாள்கள் அது நீட்டிக்கப்பட்டது. மீண்டும், கடந்த டிசம்பா் 10-ஆம் தேதி 17 நாள்கள் பரோலில் விடுவிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுக் கிடங்கில் கெட்டுப்போன தானியம்! ம.பி. மக்கள் ஒரு மாதம் சாப்பிட்டிருக்கலாம்!!

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு மாத காலத்துக்கு உணவளிக்கும் அளவிலான தானியங்கள், அரசுக் கிடங்கில் வைக்கப்பட்டு வீணடிக்கப்பட்டுள்ளது.இது கெட்டுப்போனதால், கால்நடைத் தீவனமாகக... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: ஆம் ஆத்மிக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸை தொடர்ந்து சிவசேனை(உத்தவ் அணி) கட்சியும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என... மேலும் பார்க்க

திருப்பதி கூட்ட நெரிசல்.. என்ன நேர்ந்தது?

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தபோது, திடீரென முக்கிய நுழைவாயில் திறக்கப்பட்டதால், பக்தர்கள் கண்மூடித்தனமாக அதைநோக்கி ஓடியபோது கீழே விழுந்தவர்களை மிதித்துக்... மேலும் பார்க்க

பொங்கலுக்கு ஊருக்குப் போறீங்களா? இந்த வாட்ஸ்ஆப் சேவை பற்றி தெரியுமா?

தமிழக மக்கள் பலரும் தற்போது சிந்தித்துக் கொண்டிருப்பது பொங்கலுக்கு ஊருக்குப் போவது பற்றித்தான். அப்படி ரயிலில் பொங்கலுக்கு ஊருக்குப் போகும்போது, இந்த வாட்ஸ்ஆப் சேவை பற்றி நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டு... மேலும் பார்க்க

எதிர்காலம் போர் அல்ல, அமைதிதான்: பிரதமர் மோடி

இந்தியா சொல்வதை உலகம் கேட்கிறது, எதிர்காலம் போரில் இல்லை அமைதியில்தான் உள்ளது எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். புவனேஸ்வரில் நடைபெற்ற பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முதல்.. எம்எல்ஏ வரை.. மாத ஊதியம் எவ்வளவு?

புது தில்லி: ஒரு தனி மனித வாழ்க்கையில் ஊதியம் என்பது மிகவும் அத்தியாவசியமானது, அது தினக்கூலியாகவோ, மாத ஊதியமாகவோ, தொழில் லாபமாகவோ, முதலீடுகள் மூலம் கிடைக்கும் வட்டியாகவோ இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு மாத... மேலும் பார்க்க