சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
வெற்றி மாறனின் இளங்கலை - திரைக்கல்வி: 100% உதவித் தொகை!
இயக்குநராகும் கனவுகளோடுவரும் வாய்ப்புகள் கிடைக்கப் பெறாத எளிய மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பாக 100 சதவிதிதம் உதவித் தொகையுடன் திரைக் கல்வியில் இளங்கலை படிக்க வெற்றி மாறனின் பன்னாட்டுத் திரைப் பண்பாடு அறிவித்துள்ளது.
இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பொல்லாதவன் மூலம் இயக்குநராக அறிமுகமான வெற்றி மாறம் ஆடுகளம் படத்துக்காக தேசிய விருது பெற்றார்.
சமீபத்தில் விஜய் சேதுபதி, சூரியை மையமாக வைத்து விடுதலை 2 படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
இயக்குநர் வெற்றி மாறனின் பன்னாட்டுத் திரை பண்பாடு ஆய்வகம் கல்விப் பணியில் மூன்றாம் ஆண்டில் கால் பதிக்கிறது. இயக்குநராகும் கனவுகளோடுவரும் வாய்ப்புகள் கிடைக்கப் பெறாத எளிய மாணவர்களுக்கு 100 % உதவித் தொகையுடன் திரைக் கல்வியில் இளங்கலைப் பட்டப்படிப்பை வழங்கி வருகிறது.
'இளங்கலை - திரைக்கல்வி' 2025 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. வாழ்த்துக்கள் வெற்றி மாறன் சார் எனக் கூறியுள்ளார்.
12ஆம் வகுப்பு முடித்தவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் இந்த மூன்றாண்டு இளங்கலைப் படிப்புக்கு https://iifcinstitute.com/ விண்ணப்பிக்கலாம்.
மேலும் தகவலுக்கு 9363285306 என்ற எண்ணை அல்லது iifcinstituteofficial@gmail.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.