டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ஒருபோதும் வராது: அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்
மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிா்த்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, வல்லாளபட்டி உட்பட்டு இருக்கக்கூடிய மேலூர் பகுதியில் ஒரு போதும் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் உறுதியாக வராது, வரக்கூடாது என சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி ஆதரவோடு தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை' என அமைச்சர் மூர்த்தி அரிட்டபட்டியில் பொதுமக்கள் முன்பு தெரிவித்தார்.