சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
விராட் கோலி எனக்கு முன்மாதிரி: சாம் கான்ஸ்டாஸ்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி எனக்கு முன்மாதிரி என்றும் விராட் கோலியுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் என்ன நடந்தது என்பது பற்றியும் ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடர் நடந்து முடிந்துவிட்டது. ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
மெல்பர்னில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான 19 வயதான சாம் காஸ்டாஸ், முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசியதுடன் ஒரே போட்டியில் மிகவும் பிரபலமானார்.
மோதலும் காதலும்..! கான்ஸ்டாஸ் குடும்பத்தினரை சந்தித்த கோலி, பும்ரா!
அதே போட்டியில் விராட் கோலி, சாம் கான்ஸ்டாஸின் தோளில் மோதியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கடைசிப் போட்டியிலும் சாம் கான்ஸ்டாஸ், ஜஸ்பிரித் பும்ராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
போட்டி தொடருக்குப் பின்னர் சாம் கான்ஸ்டாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “போட்டியின் போது ஏற்பட்ட வாக்கு வாதத்திற்கு பிறகு விராட் கோலியைச் சந்தித்து அவருடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரை நான் முன்மாதிரியாக வைத்திருக்கிறேன். விராட் கோலிக்கு எதிராக விளையாடுவதை நான் மிகப்பெரிய மரியாதையாகப் பார்க்கிறேன்.
ஆப்கன் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக யூனிஸ்கான் நியமனம்!
அவர் எனது விளையாட்டைப் பார்த்து வாழ்த்துத் தெரிவித்தார். அவரது விளையாட்டை நான் சிறுவயதில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். கிரிக்கெட்டில் அவர் ஒரு ஜாம்பவான். விராட் கோலி பேட்டிங் ஆடும் போது அருமையாக விளையாடுகிறார் என வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அதுமட்டுமின்றி விராட் கோலி பேட்டிங் செய்யும் போது ரசிகர்கள் அனைவரும் அவரது பெயரை சொல்லி கோஷமிட்டனர். இது நம்ப முடியாத ஒன்றாகவே இருந்தது.
விராட் கோலி எனக்கு வாழ்த்து தெரித்து பின்னர், இலங்கை தொடருக்கு என்னைத் தேர்வு செய்யப்பட்ட நன்றாக விளையாட வேண்டும் என்று நம்புகிறேன் என்றும் கூறினார். எனது குடும்பத்தினர் அனைவரும் விராட் கோலியை நேசிக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.