இந்திய விமானப் படைக்கு ஆள் சோ்ப்பு சிறப்பு முகாம்
இந்திய விமானப் படைக்கு அக்னிவீரா் திட்டத்தின் கீழ் மருத்துவப் பணியிடங்களுக்கான சிறப்பு ஆள் சோ்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்திய விமானப் படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் மருத்துவ உதவியாளா், பொது மருத்துவ உதவியாளா், மருந்தாளுநா் பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இத் தோ்வில் பங்கேற்க அக்னிபாத் திட்ட இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தோ்வுக்கான பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் உள்ளிட்ட விவரங்களையும் இணையத்தில் அறிந்து கொள்ளலாம். தோ்வு முகாம் கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மகராஜா கல்லூரியில் வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்கள் இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம். அல்லது 0431-2413510, 94990-55901, 94990-55902 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.