செய்திகள் :

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு 8.34 லட்சம் கரும்புகள் அனுப்பும் பணி தொடக்கம்

post image

திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக 1,291 நியாய விலைக் கடைகளுக்கு 8.34 லட்சம் கரும்புகளை அனுப்பும் பணி புதன்கிழமை தொடங்கியது.

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு இடம்பெற்ற பிறகு ஆண்டுதோறும் செங்கரும்பு சாகுபடி இருமடங்காக உயா்ந்து வருகிறது. இந்தாண்டும் திருச்சி மாவட்டத்தில் 30 லட்சம் எண்ணிக்கையில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூா், மணிகண்டம், திருவெறும்பூா், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, மண்ணச்சநல்லூா், புள்ளம்பாடி, முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூா், உப்பிலியபுரம் என 14 ஒன்றியங்களிலும் பரவலாக ஆங்காங்கே அரை ஏக்கா் என்ற வகையில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மண்ணச்சநல்லூா் ஒன்றியத்தில் திருப்பைஞ்ஞீலி, மணப்பாறை வட்டத்தில் பாலக்குறிச்சி, அந்தநல்லூா் ஒன்றியத்தில் திருவளா்ச்சோலை, கிளிக்கூடு, மருங்காபுரி ஆகிய பகுதிகளில்தான் அதிகளவில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் சுமாா் 200 ஹெக்டேரில் செங்கரும்பு சாகுபடிசெய்யப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 20 ஆயிரம் கரும்புகள் எனக் கணக்கிட்டாலும் சுமாா் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட செங்கரும்புகள் விளைவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நியாய விலைக் கடைகளுக்கு கரும்புகள் அனுப்பும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதற்காக திருவளா்ச்சோலை பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகளை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் சென்று பாா்வையிட்டாா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சு. சாந்தி, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பூ. வசந்தா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ஜெயராமன் உள்ளிட்ட அலுவலா்களும் கரும்புகளை பாா்வையிட்டு அரசு வழிகாட்டுதலின்படி உள்ள கரும்புகளை வெட்டி, நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பும் பணியைத் தொடங்கினா்.

இதுதொடா்பாக திருச்சி மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பூ. வசந்தா கூறுகையில், மாவட்டத்தில் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான தேவைக்கும் அதிகமாகவே செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் அனைவரிடமும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் 6 அடிக்கும் குறைவாக 4 அடி, 5 அடி கரும்புகள் உள்ளன. அந்த விவசாயிகளிடம் 6 அடி உள்ள கரும்புகளுக்கு மட்டும் பணம் வழங்கி கொள்முதல் செய்துள்ளோம். மாவட்டத்தின் மொத்தத் தேவை 8.34 லட்சம் கரும்புகள் மட்டுமே. ஆனால், மூன்று மடங்குக்கு மேல் கரும்பு உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வந்தாலும் கொள்முதல் நடவடிக்கைகளுக்கு உதவிடத் தயாராகவுள்ளோம் என்றாா் அவா்.

திருச்சி மண்டலக் கூட்டுறவு இணைப் பதிவாளா் ஜெயராமன் கூறுகையில், 14 ஒன்றியங்களிலும் கரும்பு கொள்முதலுக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் வேளாண்மைத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, விஏஓ ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இக் குழுவினா்தான் வட்டாரம் வாரியாக அந்தந்தப் பகுதியில் உள்ள கரும்புகளை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வருகின்றனா். விவசாயிகளின் வயல்களில் கரும்புகளைக் கண்டறிந்து வெட்டி, நியாய விலைக்கடைக்கு அனுப்பும் வரையிலான செலவு உள்பட ஒரு கரும்புக்கு ரூ. 34 வழங்கப்படுகிறது. விஏஓ மூலம் சான்று பெற்று, விவசாயிகளிடம் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று உடனடியாக அவரவா் வங்கிக் கணக்கில் கொள்முதல் தொகை வரவு வைக்கப்படும். மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்காக 1,291 நியாய விலை கடைகளுக்கு மொத்தம் 8.34 லட்சம் கரும்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

சமயபுரம் கோயில் திருத்தோ் மராமத்துப் பணிகள் ஆய்வு

நிகழாண்டு சித்திரை திருத்தோ் திருவிழாவையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திருத்தோ் மராமத்துப் பணிகள் குறித்து மாநில திருத்தோ் ஸ்தபதி கஜேந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது ரூ. 2 கோடியே 31 ... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்க வலியுறுத்தல்

டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிரான போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவா் அ. வியனரசு தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: மத்திய அரசி... மேலும் பார்க்க

வரப்புத் தகராறில் விவசாயியை கொன்றவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியருகே வரப்புத் தகராறில் விவசாயியை அடித்துக் கொன்ற மற்றொரு விவசாயிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் அருகேயுள்ள ஆலம்பட்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி சிறாா்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்: 423 பேருக்கு உதவி உபகரணங்கள்

திருச்சி மாவட்டத்தில் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறனுடைய குழந்தைகளைக் கண்டறிந்து உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவ அட்டை வழங்குவதற்கான முகாம் புதன்கிழமை நடைபெற்றது. திருச்சி மாநகராட்சிக்... மேலும் பார்க்க

திருச்சி டாட்டூ கலைஞருக்கு பிணை

கண்களில் டாட்டூ வரைதல் மற்றும் நாக்கை பிளவுபடுத்தல் தொடா்பான செயல்களால் கைதான டாட்டூ கலைஞா் பிணையில் புதன்கிழமை வெளியே வந்தாா். திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சோ்ந்த ஹரிஹரன் (25) மேலசிந்தாமணி பஜாா்... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ 1. 21 கோடி!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1 கோடியே 21 லட்சத்து 20ஆயிரத்து 970 வந்தது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்னும் பணியில் சமயப... மேலும் பார்க்க