இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!
இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம்.
சுனில் தேவ் இயக்கத்தில் எஸ்.பி. சித்தார்த், அருண் பாண்டியன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் அதோமுகம். இப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை(ஜன. 10) வெளியாகிறது.
நடிகை நஸ்ரியா பிரதான பாத்திரத்தில் நடித்த திரைப்படமான சூக்ஷம தர்ஷினி திரைப்படம் ஜீ தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
அஷ்டகர்மா, ககனாச்சாரி படங்கள் சிம்பிளி செளவுத் ஓடிடி தளத்தில் நாளை(ஜன. 10) வெளியாகிறது.
இதையும் படிக்க: எதிர்நீச்சல் -2 வரவேற்பு குறைவு: இந்த வார டிஆர்பி பட்டியல்!
இப்படங்களைத் தவிர, கடந்த வாரங்களில் ஓடிடியில் வெளியான ஆரகன் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியிலும் திரும்பிப்பார் படம் சிம்பிளி செளத் ஓடிடி தளத்திலும் காணக் கிடைக்கிறது.
ஜாலியோ ஜிம்கானா படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளத்திலும் ரூபன் திரைப்படத்தை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்திலும் வட்டார வழக்கு திரைப்படத்தை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்திலும் காணலாம்.
பஹீரா திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். சொர்க்கவாசல் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் காணக் கிடைக்கிறது.