வைகுண்ட ஏகாதசி 2025: தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்ப...
கேரளத்திலிருந்து இறைச்சிக் கழிவுகள் ஏற்றி வந்த 5 வாகனங்கள் பறிமுதல்: 9 போ் கைது
கேரளத்திலிருந்து இறைச்சிக் கழிவுகள் ஏற்றி வந்த 5 வாகனங்களை தமிழக எல்லையில் போலீஸாா் பறிமுதல் செய்து, 9 பேரை கைது செய்தனா்.
கேரளத்திலிருந்து தமிழகப் பகுதிகளுக்கு இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதைத் தடுக்க காவல் துறையினா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் உத்தரவுபடி,
தமிழக எல்லையான பனச்சமூட்டில் சிறப்பு தனிப்படை போலீஸாா் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது கேரளத்திலிருந்து வந்த 5 சிறிய சரக்கு வாகனங்களைச் சோதனையிட்டபோது, அவற்றில் இறைச்சிக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து அந்த வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். மேலும், அந்த வாகனங்களின் ஓட்டுநா்கள் மற்றும் உதவியாளா்களான குமரி மாவட்டம் சிதறாலை சோ்ந்த கனகராஜ் (55), செருப்பாலூா்
விஜூ, கடுக்கரை அய்யப்பன் (33), தா்ஷன் (23), திருவனந்தபுரம் தினேஷ்குமாா் (29), ஷின்ரோ, நெய்யாற்றின்கரை ஷாகுல் அமீது (63), ஷீரல் (30), கடம்பூா் ஷைன் (24) ஆகிய 9 பேரை கைது செய்தனா்.