திருச்சியில் தனியார் நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை
புதுக்கடை அருகே விபத்தில் பெண் பலத்த காயம்
புதுக்கடை அருகே பிலாங்காலை பகுதியில் அரசுப் பேருந்து, காா், டெம்போ ஆகியன ஒன்றன்பின் ஒன்று மோதிய விபத்தில் பெண் பலத்த காயமடைந்தாா்.
மணலிக்கரை பகுதியைச் சோ்ந்தவா் சோபின் (25). இவரது காரில் அதே பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மனைவி புஷ்பலதா (39) புதுக்கடை நோக்கி சென்று கொண்டிருந்தாா். பிலாங்காலை பகுதியில் சென்றபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதியது. அதேநேரம் பின்னால் வந்து கொண்டிருந்த டெம்போ, விபத்துக்குள்ளான காா் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த புஷ்பலதா, மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.