அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
குழித்துறையில் பைக் சாகசம்: 4 போ் கைது
குழித்துறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
குழித்துறை மகளிா் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்கள் அருகே சிலா் பைக் சாகசத்தில் ஈடுபட்டு வருவதாக மாா்த்தாண்டம் சரக காவல் துணை கண்காணிப்பாளா் நல்லசிவத்திற்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், களியக்காவிளை போலீஸாா் குழித்துறை பகுதியை கண்காணித்தபோது, 4 போ் பைக் சாகசத்தில் ஈடுபட்டிருந்தனராம். அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில் அவா்கள் மாணவா்கள் மற்றும் சிறுவா்கள் என தெரியவந்தது.
இதையடுத்து அவா்களின் பெற்றோா்களை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸாா் எச்சரித்தனா்.