செய்திகள் :

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

post image

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 78 செவிலியர் பணிக்கு ஓப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: செவிலியர்

காலியிடங்கள்: 78

வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: செவிலியர் பட்டயப்படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணி முற்றிலும் தற்காலிகமானது. பணியில் சேருவதர்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட வேண்டும். பணி நிரந்தரம் செய்யப்படாது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் https:// Tiruvallur.nic.in என்ற திருவள்ளூர் மாவட்ட இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயற் செயலாளர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், 545. ஆசூரி தெரு, திருவள்ளூர் மாவட்டம் 602001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 31.1.2025

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்யவும்.

இந்திய ரயில்வேயில் 1036 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ரயில்வேயில் 1036 அமைச்சு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (ஆர்ஆர்பி) வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதி... மேலும் பார்க்க

தினமும் ரூ.750 சம்பளத்தில் மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் வேலை வேண்டுமா?

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் வாயிலாக பணியமர்த்திட தகுதியானவர்களிடம் இருந்து வெள்ளிக்கிழமை(... மேலும் பார்க்க

தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் நிரப்பப்பட உள்ள 56 குரூப் 'ஏ', 'பி' மற்றும் குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 7 ஆம் தேத... மேலும் பார்க்க

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் துணை அமைப்புகளில் முதன்மையான தேசிய பொதுத் தேர்வு வாரியங்களில் ஒன்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ).இந்த கல்வி வாரியம் தன்னுடன் இணைந்த... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வேண்டுமா?: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய விருப்பமுள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூ... மேலும் பார்க்க

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் நவரத்தின மதிப்பைப் பெற்ற பொதுத்துறை நிறுவனமான மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவத்தின் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவ... மேலும் பார்க்க