BB Tamil 8 Exclusive: சௌந்தர்யாவுடன் திருமணம் எப்போது? - மனம் திறக்கும் விஷ்ணு
தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் நிரப்பப்பட உள்ள 56 குரூப் 'ஏ', 'பி' மற்றும் குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 5/2024
பணி மற்றும் இதரங்கள் விவரங்கள்:
குரூப் 'ஏ' பணி:
பணி: Principal Scientific/ Technical Officer
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.1,44,200
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக். அல்லது எம்.எஸ்சி, எம்சிஏ முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பணி: Principal Students Activity and Sports (SAS) Officer
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.1,44,200
தகுதி: குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் உடற்கல்வியில் முதுகலை பட்டம் அல்லது விளையாட்டு அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்ஏஎஸ் அதிகாரி பதவியில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நாடகம், இசை , திரைப்படங்கள் , ஓவியம் , போட்டோகிராபி, இதழியல் ஆகிய ஏதாவதொரு துறையில் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பணி: Deputy Registrar
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.78,800
பணி: Executive Engineer (Civil)
காலியிடங்கள்: 1
சம்பளம்: 56,100
பணி: Assistant Registrar
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.56,100
சம்மந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக். அல்லது எம்.எஸ்சி, எம்சிஏ முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
குரூப் 'பி' பணி:
பணி: Assistant Engineer
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.44,900
வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 56-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ முடித்திருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Superintendent
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.35,400
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் கணினி அப்ளிகேஷனில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Engineer
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.35,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Library & Information Assistant
காலியிடங்கள்: 1(மாற்றுத்திறனாளி)
சம்பளம்: மாதம் ரூ.35,400
தகுதி: அறிவியல், கலை, வணிகம் ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்று நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் பாடத்தில் டிப்ளமோ அல்லது இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Students Activity and Sports (SAS)
Assistant
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.35,400
தகுதி: உடற்கல்வியியல் பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் விளையாட்டு, நாடகம், இசை, திரைப்படம், பெயின்டிங், போட்டோகிராபி, இதழியல் ஆகிய ஏதாவதொரு துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
இதையும் படிக்க |மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
குரூப் 'சி' பணி:
பணி: Senior Assistant
காலியிடங்கள்: 8
சம்பளம்: மாதம் ரூ.25,500
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Assistant
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.21,700
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Office Attendant
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Lab Attendant
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். இதர பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.niw.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.1.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.