பிப்ரவரியில் தேர்தலா? தில்லி பேரவை தேர்தல் தேதி இன்று வெளியாகிறது!
தில்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதி குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிடுகிறது.
புது தில்லியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தில்லி பேரவைத் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கவிருக்கிறது.
மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் பிப்ரவரி 23ஆம் தேதியுடன் நிறைவடைவிருப்பதால், அதற்குள் தேர்தலை நடத்தி புதிய அரசைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம் என்பதால், பிப்ரவரியில் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாகவே, தில்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாகத்தான் வாக்குப்பதிவு நடைபெறுவது வழக்கம் என்பதால், வரும் தேர்தலும் அவ்வாறே நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.