லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அண்ணாமலை வாழ்த்து!
இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவராக வி.நாராயணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா். தற்போதைய இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத்தின் பதவிக் காலம் திங்கள்கிழமையுடன் (ஜன. 13) நிறைவடைகிறது.
அவா் கடந்த 2022 ஜனவரி 14-ஆம் தேதியில் இருந்து இப்பொறுப்பை வகித்து வருகிறாா். மேலும், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன் ஜன. 14-ஆம் தேதி பொறுப்பேற்கிறாா்.
அவருக்கு வாழ்த்து தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்ட வி.நாராயணனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானி வி.நாராயணன், இந்தியாவின் கிரையோஜெனிக் இயந்திர வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார்.
நிலாவின் தென் துருவப் பகுதியில் ரோவரை தரையிறக்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையைப் பெறவைத்த இஸ்ரோவின் தலைவரான சோம்நாத்துக்கும் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.