செய்திகள் :

பொருளாதார மந்த நிலையை மத்திய அரசு இனி மறுக்க முடியாது- காங்கிரஸ் விமா்சனம்

post image

நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 6.4 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், ‘நாட்டின் பொருளாதார மந்த நிலையை இனி அரசு மறுக்க முடியாது’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

நடப்பு நிதியாண்டுக்காக நிா்ணயிக்கப்பட்ட பல்வேறு இலக்குகளை எட்ட மத்திய அரசு தவறிவிட்டது என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி வெறும் 6.4 சதவீதமாகவே இருக்கும் என்று மத்திய அரசு வெளியிட்ட முன்கூட்டிய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இது, கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத குறைவு என்பதோடு, முந்தைய நிதியாண்டை ஒப்பிடும்போது (8.2 சதவீதம்) குறிப்பிடத்தக்க சரிவாகும்.

இந்திய ரிசா்வ் வங்கியும் பொருளாதார வளா்ச்சிக்கான தனது கணிப்பை 7.2 சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாக அண்மையில் குறைத்தது. தற்போது மத்திய அரசு வெளியிட்ட மதிப்பீடு அதைவிட குறைவாகும். கடந்த சில வாரங்களில் இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் வீழ்ச்சி கண்டுள்ளது; அனைத்து முக்கியத் துறைகளும் ஸ்தம்பித்துள்ளன.

முதலீடுகள் சுணக்கம்: நாட்டில் பொருளாதார மந்த நிலை மற்றும் அதன் பல்வேறு பரிமாணங்களின் யதாா்த்த நிலவரத்தை இனி மத்திய அரசு மறுக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளாகவே நாட்டின் நுகா்வு பின்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இது, பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய அடியாகும்.

நுகா்வு மந்தநிலை, ஜிடிபி வளா்ச்சியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, தனியாா் துறை முதலீடுகள் சுணக்கத்துக்கும் காரணமாகிறது.

மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (பொது-தனியாா்) வளா்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட (9%) நடப்பாண்டு குறையும் (6.4%) என்று மத்திய அரசின் மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன. இது தனியாா் முதலீடுகள் மந்தமாகியுள்ளதைக் குறிக்கிறது. புதிய உற்பத்திக்கான முதலீடுகளை மேற்கொள்ள தனியாா் துறையினா் தயங்குவது நாட்டின் வளா்ச்சியை தொடா்ந்து பாதிக்கும்.

காலத்தின் கட்டாயம்: நாட்டில் மூலதன முதலீடு ரூ.11.11 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும் என்ற மிகப் பெரிய அறிவிப்பு, 2024-25 பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. ஆனால், நவம்பா் வரையிலான காலகட்டத்தில் ரூ.5.13 லட்சம் கோடியே செலவிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இது 12 சதவீதம் குறைவாகும்.

குடும்பங்களின் சேமிப்பு குறைந்துவரும் நிலையில், ஏழைகளுக்கு வருவாய் ஆதரவு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஊதியம் அதிகரிப்பு, விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயா்வு, சிக்கலான ஜிஎஸ்டியை எளிமையாக்குவது, நடுத்தர மக்களுக்கு வருமான வரி நிவாரணம் உள்ளிட்ட நடவடிக்கைகள் காலத்தின் கட்டாயம் என்றாா் அவா்.

புதுதில்லியில் மட்டுமே போட்டியிடுவேன்: கேஜரிவால்

புதுதில்லியில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில் 2-வது தொகுதியில் போட்டியிடப்போவதாக பாஜக தலைவர்கள் கூறிய கருத்துக்கு, புது தில்லியில் மட்டுமே போட்டியிடப் போவதாகத் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவா... மேலும் பார்க்க

அரசுக் கிடங்கில் கெட்டுப்போன தானியம்! ம.பி. மக்கள் ஒரு மாதம் சாப்பிட்டிருக்கலாம்!!

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு மாத காலத்துக்கு உணவளிக்கும் அளவிலான தானியங்கள், அரசுக் கிடங்கில் வைக்கப்பட்டு வீணடிக்கப்பட்டுள்ளது.இது கெட்டுப்போனதால், கால்நடைத் தீவனமாகக... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: ஆம் ஆத்மிக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸை தொடர்ந்து சிவசேனை(உத்தவ் அணி) கட்சியும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என... மேலும் பார்க்க

திருப்பதி கூட்ட நெரிசல்.. என்ன நேர்ந்தது?

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தபோது, திடீரென முக்கிய நுழைவாயில் திறக்கப்பட்டதால், பக்தர்கள் கண்மூடித்தனமாக அதைநோக்கி ஓடியபோது கீழே விழுந்தவர்களை மிதித்துக்... மேலும் பார்க்க

பொங்கலுக்கு ஊருக்குப் போறீங்களா? இந்த வாட்ஸ்ஆப் சேவை பற்றி தெரியுமா?

தமிழக மக்கள் பலரும் தற்போது சிந்தித்துக் கொண்டிருப்பது பொங்கலுக்கு ஊருக்குப் போவது பற்றித்தான். அப்படி ரயிலில் பொங்கலுக்கு ஊருக்குப் போகும்போது, இந்த வாட்ஸ்ஆப் சேவை பற்றி நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டு... மேலும் பார்க்க

எதிர்காலம் போர் அல்ல, அமைதிதான்: பிரதமர் மோடி

இந்தியா சொல்வதை உலகம் கேட்கிறது, எதிர்காலம் போரில் இல்லை அமைதியில்தான் உள்ளது எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். புவனேஸ்வரில் நடைபெற்ற பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு ... மேலும் பார்க்க