செய்திகள் :

புதுதில்லியில் மட்டுமே போட்டியிடுவேன்: கேஜரிவால்

post image

புதுதில்லியில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில் 2-வது தொகுதியில் போட்டியிடப்போவதாக பாஜக தலைவர்கள் கூறிய கருத்துக்கு, புது தில்லியில் மட்டுமே போட்டியிடப் போவதாகத் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கேஜரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுவதால், சட்டப்பேரவைத் தேர்தல் இந்தியா கூட்டணி விவகாரம் அல்ல என்று கேஜரிவால் வலியுறுத்தினார்.

2013 முதல் புதுதில்லியில் இருந்து மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த கேஜரிவால், இந்த முறை தில்லியின் இரண்டு முன்னாள் முதல்வர்களின் மகன்களுக்கு எதிராக தீவிர மும்முனைப் போட்டியில் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மாவை பாஜக வேட்பாளராக நிறுத்திய நிலையில், மூன்று முறை தில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் மகன் சந்தீப் தீட்சித்துக்கு காங்கிரஸ் கட்சி சீட்டு வழங்கியுள்ளது.

புது தில்லியில் தோல்வியடைவோம் என்ற பயத்தில் இரண்டாவது தொகுதியில் போட்டியிடப் போவதாக பாஜக கருத்து தெரிவித்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் நான் ஒரு இடத்தில் அதாவது புது தில்லியில் மட்டுமே போட்டியிடுகிறேன் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறினார்.

ஆயிரக்கணக்கான ஆம் ஆத்மி ஆதரவாளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்காக, புது தில்லி உள்பட பல்வேறு தொகுதிகளிலிருந்து மொத்தமாக பாஜக விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதாக ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இன்று மாலை தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் வாக்காளர்களின் பெயர் நீக்கம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் கேஜரிவால் கூறினார்.

சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளித்ததற்காக சமாஜவாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிவசேனா (யுபிடி) உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் நன்றி தெரிவித்தார்.

பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியை வழிநடத்தும் காங்கிரஸ், தில்லி தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது மற்றும் இதுவரை 48 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.

70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்குப் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. முடிவுகள் பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் மேலும் ஒருவருக்கு எச்எம்பிவி தொற்று உறுதி!

குஜராத்தில் மேலும் ஒருவருக்கு எச்எம்பிவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது.குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட 80 வயது முதியவருக்கு எச்எம்பிவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்... மேலும் பார்க்க

திருப்பதி விபத்து: டிஎஸ்பி, தேவஸ்தான நிர்வாகிகள் இடைநீக்கம்!

திருப்பதி கூட்ட நெரிசல் விவகாரத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் உள்பட 2 பேரை இடைநீக்கம் செய்து முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். மேலும், திருப்பதி திருமலை தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி, தேவஸ... மேலும் பார்க்க

திருப்பதி விபத்துக்கு யார் பொறுப்பு? பவன் கல்யாண் பதில்

திருப்பதியில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட விபத்துக்கு அரசு முழு பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். சர்வதரிசன டிக்கெட் வழங்குவதில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திறமையற்ற ... மேலும் பார்க்க

மத்திய சிறையில் சீனாவின் ட்ரோன்?

போபால் சிறை வளாகத்தில் சீன தயாரிப்பு ட்ரோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.மத்தியப் பிரதேசத்தில் போபாலில் உயர் பாதுகாப்பைக் கொண்டுள்ள மத்திய சிறைக்குள் சீன தயாரிப்பு ட்ரோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மத்திய சிறை... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 30 பேர் சிக்கித் தவிப்பு!

சத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 30 பேர் சிக்கினர்.சத்தீஸ்கரில் முங்கேலியில் கட்டுமானப் பணியில் உள்ள தனியார் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் பங்கேற்கும் பிரான்ஸ் நாட்டுப் பெண்!

மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நாட்டிலிருந்து பாஸ்கல் என்ற பெண்மணி உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு வந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் வருகிற 13-ம் தேதி முதல் பிப்ரவரி 26-ம் தேதி வர... மேலும் பார்க்க