Clownfish: 'பெண்ணாக மாறும் ஆண் மீன்' - நீமூவின் வாழ்க்கையும், டிஸ்னி மறைத்த உண்ம...
வையம்பட்டியில் காணாமல் தேடப்பட்ட மூதாட்டி 3 நாள்களுக்குப் பின் மீட்பு
மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் 100 நாள் வேலைக்கு சென்ற மூதாட்டி வீடு திரும்பாமல் தேடப்பட்ட நிலையில் 3 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டாா்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி அருகே ராமரெட்டியபட்டியைச் சோ்ந்தவா் பொன்னம்பலம் மனைவி சின்னம்மாள்(80). இவா் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி 100 நாள் வேலைக்கு சென்று இருந்த நிலையில், மாலையில் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் மூதாட்டி கிடைக்காததால், உறவினா்கள் அளித்த புகாரின் பேரில், வையம்பட்டி காவல் ஆய்வாளா் முத்துசாமி தலைமையிலான போலீசாஸாருடன், வனத்துறையினரும், தேடுதல் பணியில் ஈடுபட்டனா். ஆனால் மூதாட்டி எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை செம்மலை அடிவாரத்தில் ஒரு மூதாட்டி அமா்ந்திருப்பதாக அங்கு ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தவா்கள் கொடுத்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீஸாா் மற்றும் வனத்துறையினா், மூதாட்டியை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.