செய்திகள் :

Ind Vs Eng : 'இரண்டாவது போட்டியிலாவது ஷமி ஆடுவாரா?' - களநிலவரம் என்ன?

post image
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான டி20 தொடர் நடந்து வருகிறது. காயம் காரணமாக 13 மாதங்களாக இந்திய அணியில் ஆடாமல் இருந்த முகமது ஷமி இந்தத் தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணிக்குள் வந்திருந்தார். ஆனால், ஷமியை முதல் போட்டிக்கான ப்ளேயிங் லெவனிலேயே அணி நிர்வாகம் எடுக்கவில்லை. இந்நிலையில், சேப்பாக்கத்தில் நடக்கவிருக்கும் இரண்டாவது போட்டியிலாவது ஷமி ப்ளேயிங் லெவனில் இடம்பெறுவாரா எனும் கேள்வி எழுந்திருக்கிறது.

கால் பாதங்கள் மற்றும் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாகத்தான் முகமது ஷமி இத்தனை மாதங்களாக ஓய்வில் இருந்தார். கடைசியாக 2023 ஓடிஐ உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடியிருந்தார். அதன்பிறகு காயத்துக்கான சிகிச்சையிலும் ஓய்விலுமே இருந்தார். கடந்த மாதம்தான் காயத்திலிருந்து முழுமையாக குணமாகி உள்ளூர் போட்டிகளில் ஆடியிருந்தார். இதனைத் தொடர்ந்துதான் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான டி20, ஓடிஐ தொடருக்கு எதிராகவும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலும் சேர்க்கப்பட்டிருந்தார்.

ஷமி முழுமையாக குணமடைந்து உள்ளூர் போட்டிகளிலும் ஆடி விட்டதால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலிருந்தே ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஈடன் கார்டனில் நடந்த அந்தப் போட்டியின் லெவனில் ஷமி இல்லை. 3 ஸ்பின்னர்களோடு இந்திய அணி ஆடியிருந்தது. இத்தனைக்கும் அந்த முதல் போட்டிக்கு முன்பாக சூர்யகுமார் யாதவ் ஷமியை ரொம்பவே புகழ்ந்தும் பேசியிருந்தார். 'ஷமி மாதிரியான அனுபவமிக்க வீரர் அணியிலிருப்பது அணிக்கே மதிப்பை கொடுக்கிறது. அவர் காயத்திலிருந்து மீண்டு வந்து கம்பேக் கொடுப்பதில் மகிழ்ச்சி.' என பேசியிருந்தார். ஆனால், ப்ளேயிங் லெவனில் எடுக்கவில்லை

ஷமியை எடுக்காதது பற்றி பெரிதாக விளக்கமும் கொடுக்கப்படவில்லை. 'இது அணி நிர்வாகத்தின் முடிவு. மைதான சூழலை கருத்தில்கொண்டு அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும்.' என அபிஷேக் சர்மா மட்டும் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருந்தார். வேறெந்த தகவலும் ஷமி பற்றி இல்லை.

சேப்பாக்கத்தில் இன்று இந்திய அணி இங்கிலாந்தை இரண்டாவது டி20 இல் எதிர்கொள்கிறது. இதற்கு முன்பாக நேற்று இரு அணிகளும் சேப்பாக்கத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்திய அணியின் பயிற்சியின் போது ஷமி ஒரு அரை மணி நேரம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். கொஞ்ச நேரம் ஜாக்கிங், கொஞ்ச நேரம் பீல்டிங் ட்ரில்கள், கொஞ்ச நேரம் பௌலிங் என அவரின் பயிற்சி செஷன் இருந்தது. சேப்பாக்கத்தில் பயிற்சியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருப்பதால் அவர் இந்தப் போட்டியில் லெவனில் எடுக்கப்படுவார் என நம்பப்படுகிறது. ஆனால், இன்னொரு பக்கம் ஷமி முழுமையாக 100% உடல்ரீதியாக தயாராக இல்லாமல் அவரை இறக்கி ரிஸ்க் எடுக்கக் கூடாது என்று நினைப்பதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

Shami

ஷமி ஆடுவாரா மாட்டாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

India: திலக்கின் மேட்ச் வின்னிங் ஆட்டம்;ரவியின் சர்ப்ரைஸ் பவுண்டரி திரில்லரை இந்தியா வென்றது எப்படி?

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற... மேலும் பார்க்க

Shardul Thakur : 'ஐ.பி.எல் இல் Unsold; ரஞ்சியில் அசத்தல் ஆட்டம்!' - கலக்கும் ஷர்துல் தாகூர்

ஆல்ரவுண்டரான ஷர்துல் தாகூர் ரஞ்சி போட்டியில் கலக்கி வருகிறார். இக்கட்டான சூழலில் மும்பை அணி தவித்து வந்த சமயத்தில் முதல் இன்னிங்ஸில் அரைசதத்தையும் இரண்டாவது இன்னிங்ஸில் சதத்தையும் அடித்து அணியை காப்பா... மேலும் பார்க்க