குடியரசு நாள் விழா மேடையில் மயங்கி விழுந்த காவல் ஆணையர்! என்ன நடந்தது?
குடியரசு நாள் விழா நாடெங்கிலும் இன்று(ஜன. 26) வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், விழா மேடையில் உரையாற்றினார்.
அப்போது அதே மேடையில் அவருக்கு அருகே பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த திருவனந்தபுரம் மாநகர காவல் ஆணையர் தாம்ஸன் ஜோஸ் முன்பக்கமாக சரிந்து விழுந்தார். முதலில், இதை ஆளுநர் கவனிக்கவில்லை. ஆனால், இதைக்கண்டதும், அங்கிருந்த அதிகாரிகள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கே அவருக்கு மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டதைத்தொடர்ந்து அவர் நலம் பெற்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காவல் ஆணையர் மயங்கி விழுந்த சம்பவம், குடியரசு நாள் விழாவில் கலந்துகொண்டவர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது.