Bigg Boss Rayan: ``செளந்தர்யாவுக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப் பற்றிய கமென்ட்ஸ்'' -...
வயநாட்டில் ஆட்கொல்லி புலி உயிரிழந்தது
வயநாடு அருகே பெண்ணை அடித்துக்கொன்ற ஆட்கொல்லி புலி, சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடி அருகே கடந்த 24ஆம் தேதி தற்காலிக வனக் கண்காணிப்பாளரின் மனைவி ராதா தனது பணியிடத்தை நோக்கி நடந்து சென்றபோது புலி தாக்கி பலியானார்.
அதைத்தொடர்ந்து ஜனவரி 26ஆம் தேதி வனத்துறையின் அதிகாரி ஒருவரும் புலி தாக்கியதில் காயம் அடைந்தார்.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். ஆட்கொல்லி புலியை கொல்ல வேண்டும் எனவும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் போராட்டத்தையடுத்து புலியை சுட்டுப்பிடிக்க அம்மாநில வனத்துறை முடிவு செய்து, தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் பழங்குடியினப் பெண்ணைக் கொன்று கொன்ற புலி இறந்துவிட்டதாக ஜனவரி 27 திங்கட்கிழமை வனத்துறை தெரிவித்துள்ளது.
வாரத்தின் முதல் நாளில் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!
பஞ்சரகொல்லி கிராமத்தில் உள்ள பிரியதர்ஷினி எஸ்டேட் அருகே உள்ள பிலக்காவு வனப்பகுதியில் அதிகாலை 2:30 மணியளவில் புலி இறந்து கிடப்பதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.
இறந்துகிடந்த புலியின் கழுத்தில் ஆழமான காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த புலி வேறொரு புலியால் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும் புலி இறப்பிற்கான காரணம் உடற்கூராய்வுக்கு பிறகே தெரியவரும் என்று கேரள வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.