Ashwin: "பிசிசிஐ தேர்வுக்குழுவின் தலைவராக நான் போவேனா?" - அஷ்வின் சொல்வதென்ன?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டியுடன் இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஷ்வின் ஓய்வு முடிவை அறிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் அஸ்வினுக்குப் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தேர்வுக்குழுத் தலைவராக எதிர்காலத்தில்தான் வரமாட்டேன் என்று அஷ்வின் தெரிவித்திருக்கிறார்.
''நான் இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராகவோ அல்லது தேர்வுக்குழு உறுப்பினராகவோ இருப்பதை விரும்ப மாட்டேன். ஏனெனில் இந்தியாவில் திறமையான வீரர்கள் அதிகம் இருப்பதால் தேர்வுக்குழுத் தலைவரின் பணி மிகவும் கடினமான ஒன்றாகும்.
வரவிருக்கும் ஐ.பி.எல் சீசனில், கில் மற்றும் ருதுராஜ் இருவரும் ரன்கள் எடுத்தால், அது தேர்வாளர்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களாக, இதுபோன்ற திறமையான வீரர்கள் கிடைத்திருப்பது நமக்குப் பெருமையான விஷயமாகும்'' என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், ''அழுத்தத்தின் கீழ் சிறப்பாகச் செயல்படும் வீரர்களுக்கு நாம் சில முக்கியத்துவங்களைக் கொடுக்க வேண்டும். ஏனெனில், நவீன கிரிக்கெட்டில் பந்தைத் திறமையாகக் கையாளும் தன்மை கொண்ட வீரர்கள் ஏராளம் உள்ளனர். கடிமான சூழ்நிலைகளில் சிறப்பாகப் பந்து வீசும் திறன் கொண்ட வீரர்களுக்குப் பெரிய போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்'' என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs