Bigg Boss Rayan: ``செளந்தர்யாவுக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப் பற்றிய கமென்ட்ஸ்'' -...
Kamindu Mendis: ICC-யின் வளர்ந்து வரும் வீரருக்கான விருது வென்ற கமிந்து மெண்டிஸ் - யார் இவர்?
ஐ.சி.சி.யின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் வென்றிருக்கிறார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்களில் ஒருவருக்கு ஐ.சி.சி.யின் சார்பில், ஆண்டுதோறும் வளர்ந்து வரும் வீரருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2024 ஆம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை இலங்கை அணியின் இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் தட்டி சென்றிருக்கிறார். 26 வயதான கமிந்து மெண்டிஸை பொறுத்தவரை அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து கடந்த ஆண்டில் மட்டும் 1,451 ரன்கள் குவித்திருக்கிறார்.
அவரது சராசரி 50-க்கும் சற்று அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டுக்கு முன்பாக இலங்கை அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியிருந்த கமிந்து மெண்டிஸ், தற்போது இலங்கை அணியில் தனக்கென அசைக்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி நடுவரிசை ஆட்டக்காரரான கமிந்து மெண்டிஸ் கடந்த ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,049 ரன்கள் குவித்திருக்கிறார்.
அவரது சராசரி 74.92 ஆக உள்ளது. கடந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் நடுவரிசை ஆட்டக்காரர்கள் 6 பேர் 1000-க்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ளனர். அதில் கமிந்து மெண்டிஸும் ஒருவர். கடந்த ஆண்டில் மட்டும் கமிந்து மெண்டிஸ் 5 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் எடுத்திருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த வீரர்களில் ஒருவராகவும் அவர் திகழ்கிறார். இப்படி கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு இலங்கை அணியின் புதிய ‘சென்சேஷனாக உருவெடுத்திருக்கும் கமிந்து மெண்டிஸுக்கு பிசிசிஐ இந்த விருதினை வழங்கி இருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.!