கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல! டென்மார்க் - அமெரிக்கா தலைவர்களிடையே காரசார விவாதம்!
வாஷிங்டன் : கிரீன்லாந்து தீவு விற்பனைக்கு அல்ல என அமெரிக்க அதிபரிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சென்.
டென்மார்க்கின் ஓர் அங்கமாக தன்னாட்சி பெற்ற பிராந்தியமாகத் திகழும் கிரீன்லாந்து தீவை, விலைக்கு வாங்கப்போவதாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் அமெரிக்க் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
இந்த நிலையில், மேற்கண்ட இவ்விரு தலைவர்களுக்குமிடையிலான தொலைபேசி உரையாடலின்போது, அமெரிக்க தேசியத்தின் பாதுகாப்புக்காக ஆர்க்டிக் பிராந்தியமான கிரீன்லாந்தின் முக்கியத்துவம் குறித்து டென்மார்க் பிரதமரிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்துரைத்ததாக ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலின்போது, கிரீன்லாந்து விவகாரத்தில் ராணுவ தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரந்தளவிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த டென்மார்க் தயாராக இருப்பதாக டொனல்ட் டிரம்ப்பிடம் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சென் எடுத்துக் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், டென்மார்க்கின் வாதத்தை ஏற்க டொனால்ட் டிரம்ப் மறுத்துவிட்டதாக இவ்விவகாரத்தை நன்கறிந்த அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க :கிரீன்லாந்து மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை?