செய்திகள் :

India: திலக்கின் மேட்ச் வின்னிங் ஆட்டம்;ரவியின் சர்ப்ரைஸ் பவுண்டரி திரில்லரை இந்தியா வென்றது எப்படி?

post image
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றிருக்கிறது.
Ind vs Eng

சூர்யகுமார் யாதவ்தான் டாஸை வென்றிருந்தார். இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வருண், வாஷி, ரவி பிஷ்னோய், அக்சர் படேல் என நான்கு ஸ்பின்னர்களோடு இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் ஸ்பின்னர்களின் அட்டாக்கை இங்கிலாந்து பேட்டர்களால் சமாளிக்கவே முடியவில்லை. இங்கிலாந்து எப்போதுமே இந்திய சூழலுக்கு திணறிதான் வருகிறது. 2023 உலகக்கோப்பையில் மட்டமாக தோற்ற பிறகும் இங்கிலாந்து அணி எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதற்கு இந்த போட்டியும் உதாரணமாக அமைந்தது. சேப்பாக்கம் ஸ்பின்னர்களின் பூமி வேறு. வழக்கம்போல ஸ்பின்னர்கள் வந்தவுடனேயே ரிவர்ஸ் ஸ்வீப் ஆடும் டெக்னிக்கில் இருந்து இங்கிலாந்து அணி இன்னமும் மாறவில்லை.

India

இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 9 விக்கெட்டுகளில் 6 விக்கெட்டுகளை இந்திய ஸ்பின்னர்கள்தான் வீழ்த்தியிருந்தனர். அவர்களால் கூக்ளியையும் ஆட முடியவில்லை. Against the Spin ஆகவும் சரியான ஷாட்களை ஆட முடியவில்லை. வழக்கம்போல பட்லர் மட்டும்தான் நின்று அடித்தார். அவர் 45 ரன்களை எடுத்திருந்தார். அவரையும் அக்சர் படேல்தான் வீழ்த்தினார்.

அபாயகரமான பேட்டரான ஹாரி ப்ரூக்கை வருண் சக்கரவர்த்தி தனது மேஜிக்கல் கூக்ளி மூலம் போல்டாக்கினார். அந்த டெலிவரியை எப்படி மிஸ் செய்தார் என்பதை ப்ரூக்காலயே நம்ப முடியவில்லை. வாஷிங்டன் சுந்தர் ஒரே ஒரு ஓவரைத்தான் வீசியிருந்தார். அதுவும் பவர்ப்ளேயிலேயே வீசி பென் டக்கெட்டின் விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்தார். இடையில் அபிஷேக் சர்மாவுக்கெல்லாம் ஒரு ஓவரை சூர்யா கொடுத்திருந்தார். அவரும் ஒன்றிரண்டு பவுண்டரிகளை கொடுத்தாலும் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்தார். வருண் கொஞ்சம் அடிபட்டாலும் தனது கடைசி பந்தில் விக்கெட்டை வீழ்த்தி பாசிட்டிவ்வாக முடித்தார். தட்டுத்தடுமாறிய இங்கிலாந்து அணி ஒருவழியாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்தது.

Tilak

இந்திய அணி சேஸிங்கை தொடங்கியது. முதல் போட்டியை போலவே இந்திய அணி சுலபமாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடக்கத்திலிருந்தே சீராக விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணியும் தடுமாறியது. பலனாக ரசிகர்களுக்கு ஒரு பரபர திரில்லர் போட்டியை காணும் வாய்ப்பு கிடைத்தது. அதிரடி வீரரான அபிஷேக் சர்மாவை மார்க் வுட் 12 ரன்களில் lbw ஆக்கினார். ஆர்ச்சரின் பந்தில் அரைகுறையாக ஒரு ஷாட்டை ஆடி சாம்சனும் 5 ரன்களில் அவுட். கார்சின் பந்தில் கேப்டன் சூர்யா போல்டை பறிகொடுக்க ஜூரேல் 4 ரன்களில் அவுட் ஆனார். ஓவர்டன்னின் ஸ்லோயர் ஒன் டெலிவரியில் ஹர்திக்கும் சிங்கிள் டிஜிட்டில் கேட்ச் ஆனார். இந்திய அணி 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்தின் கை ஓங்கியது. ஆனாலும் ஒரு பக்கம் திலக் வர்மா விக்கெட் விடாமல் நின்று ஆடிக்கொண்டிருந்தார். அவருக்கு உறுதுணையாக வாஷிங்டன் சுந்தரும் கொஞ்சம் மதிப்புமிக்க ரன்களை எடுத்துக் கொடுத்தார்.

குறிப்பாக, மார்க் வுட் வீசிய 13 வது ஓவரில் 18 ரன்களை எடுத்துக் கொடுத்து அழுத்தத்தைக் குறைத்தார். வாஷி மொத்தமாக 26 ரன்களை சேர்த்திருந்தார். ஆனால், கார்ஸ் வீசிய அடுத்த ஓவரிலேயே அவரும் அவுட். திலக் வர்மா மட்டும் நம்பிக்கையளிக்கும் வகையில் நின்றார். ஆர்ச்சரின் பந்திலும் அடித்து வெளுத்து பவுண்டரிகளை பறக்கவிட்டார். ஆர்ச்சரின் 16 வது ஓவரில் 19 ரன்களை சேர்த்தார். அரைசதத்தையும் கடந்தார்.

Tilak

8 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 13 ரன்கள் தேவைப்பட்டது. திலக் வர்மா இடதுகை பேட்டர் என்பதால் லிவிங்ஸ்டனை அழைத்து ஆப் ஸ்பின் வீச சொன்னார் பட்லர். இந்த ஓவரில் திலக் வர்மாவால் பவுண்டரி அடிக்க முடியவில்லை. அதற்கு பதிலாக ரவி பிஷ்னோய் பேக்வர்ட் பாய்ண்ட்டில் அட்டகாசமாக பவுண்டரி அடித்து போட்டியை இந்தியா பக்கம் திருப்பினார். ஓவர்டன் வீசிய கடைசி ஓவரில் இந்தியாவுக்கு 6 ரன்கள் தேவை. திலக் வர்மா வின்னிங் ஷாட்டாக பவுண்டரி அடித்து முதல் இரண்டு பந்துகளிலேயே போட்டியை முடித்தார்.திலக்வர்மா 55 பந்துகளில் 72 ரன்களை அடித்திருந்தார்..

Tilak

இந்திய ஸ்பின்னர்களின் மாயாஜாலம், திலக்கின் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ், வாஷியின் அந்த 13 வது ஓவர் அதிரடி, ரவி பிஷ்னோயின் சர்ப்ரைஸ் பவுண்டரி ஆகியவைதான் பரபரப்பான திரில்லர் போட்டியை இந்தியா பக்கமாக திருப்பிவிட்டது.

Shardul Thakur : 'ஐ.பி.எல் இல் Unsold; ரஞ்சியில் அசத்தல் ஆட்டம்!' - கலக்கும் ஷர்துல் தாகூர்

ஆல்ரவுண்டரான ஷர்துல் தாகூர் ரஞ்சி போட்டியில் கலக்கி வருகிறார். இக்கட்டான சூழலில் மும்பை அணி தவித்து வந்த சமயத்தில் முதல் இன்னிங்ஸில் அரைசதத்தையும் இரண்டாவது இன்னிங்ஸில் சதத்தையும் அடித்து அணியை காப்பா... மேலும் பார்க்க

Ind Vs Eng : 'இரண்டாவது போட்டியிலாவது ஷமி ஆடுவாரா?' - களநிலவரம் என்ன?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான டி20 தொடர் நடந்து வருகிறது. காயம் காரணமாக 13 மாதங்களாக இந்திய அணியில் ஆடாமல் இருந்த முகமது ஷமி இந்தத் தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணிக்குள் வந்திருந்தார். ஆனா... மேலும் பார்க்க