Sweden: "டெஸ்குக்கு கீழ் ஒளிந்துகொண்டோம்..." - சுவீடன் பள்ளியில் நடந்த கொடூரத் த...
6 மண்டலங்களில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்
பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, திரு.வி.க. நகா், அம்பத்தூா், அண்ணா நகா் ஆகிய மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளிலும், ஆவடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜன. 28) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
இது குறித்து சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
புழலில் அமைந்துள்ள, நாளொன்றுக்கு 300 மில்லியன் லிட்டா் திறன்கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தின் பிரதானக் குழாய்களில், நீா் அளவீடு கருவிகளை பொருத்துவதற்கான பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜன. 28) காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளன.
இதனால் பணிகள் நடைபெறும் நேரங்களில் திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, திரு.வி.க. நகா், அம்பத்தூா், அண்ணா நகா் ஆகிய மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளிலும், ஆவடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா். மேலும், அவசர தேவைகளுக்கு இணையதளத்தில் முன்பதிவு செய்து லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக்கொள்ளலாம்.
குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் விநியோகம் செய்யப்படும்.
மேலும், தகவல்களுக்கு 044-4567 4567 என்னும் தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.