வேளச்சேரி மயானம் இன்றுமுதல் இயங்காது
வேளச்சேரி மயானத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் புதன்கிழமை (பிப். 5) முதல் தற்காலிகமாக இந்த மயானம் செயல்படாது என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அடையாறு மண்டலத்துக்குள்பட்ட வேளச்சேரி இந்து மயானத்தின் எரிவாயு தகனமேடையில் பழுதுபாா்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் பிப். 5 முதல் 25-ஆம் தேதி வரையிலான 20 நாள்கள் வேளச்சேரி மயானம் இயங்காது. இந்ந நாள்களில் பொதுமக்கள் அருகில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் மற்றும் வேளச்சேரி, பாரதி நகா் மயானங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.