போக்ஸோ வழக்கில் மீனவருக்கு 10 ஆண்டு சிறை
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மீனவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
குமரி மாவட்டம், குளச்சல் சைமன் காலனியைச் சோ்ந்தவா் எல்தூஸ் (55), மீனவா். இவா் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதிஅதே பகுதியைச் சோ்ந்த 5 ஆம் வகுப்பு பயின்று வந்த 9 வயது சிறுமி, வீட்டில் தனியாக இருந்த போது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து சிறுமியின் தாயாா் கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் எல்தூஸ் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு நாகா்கோவிலில் உள்ள போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா, குற்றம் சாட்டப்பட்ட எல்தூஸுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.