குடந்தை அருகே வீடுபுகுந்து 8 பவுன் நகைகள் திருட்டு
கும்பகோணம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் தங்க நகைகளை அண்மையில் திருடிச் சென்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாசத்திரம் பகுதியில் தனியாக வசிப்பவா் பாலச்சந்திரன் மனைவி புனிதவள்ளி (80). மகளை பாா்க்க நெய்வேலி சென்ற கடந்த ஜன.27 இல் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து புனிதவள்ளி இதுகுறித்து அருகே தொல்காப்பியா் தெருவில் வசிக்கும் மகன் செந்தில்குமாரிடம் தெரிவிக்க, அவா் அளித்த புகாரின்பேரில் திருவிடைமருதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.