செய்திகள் :

வேங்கை வயல் வழக்கு: 2-வது நாளாக மக்கள் போராட்டம்; கிராமத்தை சுற்றி சோதனைச்சாவடி, போலீஸார் குவிப்பு!

post image

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அதனால், இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

வேங்கைவயல்

இந்த சம்பவம் நடைப்பெற்று மூன்றாண்டுகள் தொடங்கியும் இன்னும் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதிமன்றம் கண்டித்தது. இதற்கிடையில், 40 - க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை, டி.என்.ஏ பரிசோதனை என பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தப்பட்டது. அதோடு, பலரிடமும் குரல் மாதிரி சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் மூன்று பேர்கள் ஈடுப்பட்டதாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் கடந்த 20 - ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாக தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கம்னியூஸ்ட் தலைவர்கள் உள்ளிட்டோர், ‘இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சூழலில், வேங்கைவயல் கிராமத்திலும், புதுக்கோட்டையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட, பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

வேங்கைவயல்

மற்றொருபுறம், ‘பாதிக்கப்பட்ட எங்களில் மூன்று பேரை குற்றவாளியாக்குவதா?’ என்று வேங்கைவயலைச் சேர்ந்த மக்கள் ஊரிலேயே அமர்ந்து உண்ணாவிரதம் போராட்டத்தில் குதித்தனர். இதனால், ஊருக்கு முகப்பிலேயே நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான போலீஸார், பேரிகாட் அமைத்து செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.

இந்தச் சூழலில், வேங்கைவயலில் மக்கள் உள்ளிருப்பு உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்திக்கொண்டிருப்பதை பார்க்கச் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறி திரும்பி வரும் வழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் இளமதி அசோகன், மேற்கு மாவட்டச் செயலாளர் வெள்ளைநெஞ்சன், புதுக்கோட்டை நகரச் செயலாளர் அண்ணாத்துரை, ஆலங்குடி தொகுதிச் செயலாளர் விஜயபாஸ்கர், கணேசமூர்த்தி ஆகியோரை வேங்கைவயலுக்கும் பூங்குடிக்கும் அருகில் உள்ள பகுதியில் வைத்து காவல்துறை கைது செய்தது.

கைதானவர்கள்

அதோடு, அதேபோல் வேங்கைவயலுக்குள் நுழைய முயன்ற சிறுத்தை சிவா உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர். இன்னொருபக்கம், புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்த முயன்ற 35 -க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், வேங்கைவயல் கிராம மக்கள் இரண்டாவது நாளாக குடியரசு தினமான இன்றும் கருப்புக் கொடி ஏந்தி, உண்ணாநிலை அறப்போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அதோடு, தங்களை வெளியில் விடாமலும், தங்களது உறவுக்காரர்கள் உள்ளிட்ட யாரையும் வேங்கைவயல் கிராமத்துக்குள் அனுமதிக்காமலும் காவல்துறையினர் தடுத்து வருவதாகவும் அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

வேங்கைவயல்

வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக வேங்கைவயல் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விருதுநகர் : அண்ணனை வெட்டி கொன்ற தம்பி - கொலையில் முடிந்த திருமணம் மீறிய உறவு

விருதுநகர் மாவட்டத்தில், பெண் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை வெட்டிக்கொலை செய்த தம்பியை ராஜபாளையத்தில் போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "... மேலும் பார்க்க

``புகாரை கசியவிட்டதால்'' - போரட்டம் அறிவித்த நாளில் படுகொலை... பரவும் வீடியோவும் பகீர் பின்னணியும்!

கனிமவள கொள்ளைக்கு எதிராக..புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர்அலி (வயது: 58). இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ... மேலும் பார்க்க

சாத்தூர்: '7 வயது பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர்' - போக்சோவில் கைது

வழிபாடு நடத்துவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை சாத்தூர் மகளிர் போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "சாத்தூர் தாலுகாவுக்குட்பட்ட... மேலும் பார்க்க

மூட்டையில் தங்கம், பணம்: மங்களூருவில் கொள்ளை; நெல்லையில் பதுக்கல் - கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு அருகேயுள்ள உல்லால் பகுதியில் செயல்பட்டு வரும் கோட்டேகார் கூட்டுறவு வங்கியில் கடந்த 7-ம் தேதி முகமுடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் ஊழியர்கள்... மேலும் பார்க்க

`கோயிலில் அம்மன் சிலையை உடைத்த மர்ம நபர்கள்' - போலீஸ் குவிப்பு

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரம் ஊர் உள்ளது. இந்த ஊரில், புராண இதிகாசங்களோடு தொடர்புடைய நூற்றாண்டு பழைமைவாய்ந்த நல்லதங்காள் அம்மன் கோயில் உள்ளது.இந்தநிலையில், கோயிலில் உள்ள அம்... மேலும் பார்க்க

குடியரசு தினத்தில் அதிர்ச்சி கொடுத்த இலங்கை... 3 படகுகளுடன் 33 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று 439 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இவர்களில் சிலர் தனுஷ்கோடி - மன்னார் இடையிலான பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் மீன்பிடித்... மேலும் பார்க்க