Siragadikka aasai : ரோகிணியைப் பற்றிய உண்மை; வித்யா என்ன செய்வார்? - இந்த வாரம் ...
குடியரசு தினத்தில் அதிர்ச்சி கொடுத்த இலங்கை... 3 படகுகளுடன் 33 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!
ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று 439 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இவர்களில் சிலர் தனுஷ்கோடி - மன்னார் இடையிலான பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த படகுகளில் 3 படகுகளை சிறைபிடித்தனர்.
தங்கச்சிமடத்தை சேர்ந்த ரூபில்டன், டேனியல், ராமேஸ்வரத்தை சேர்ந்த சச்சின் ஆகியோருக்கு சொந்தமான அந்த படகுகளில் மீன்பிடிக்க சென்ற ரூபில்டன், கிறிஸ்டோபர், பாலாஜி, செந்தில்குமார், டேனியல், அண்ணாதுரை, வினிஸ்டன், சீனிவாசன், ஏனோக், ஜெயபால், வீரபாண்டி, சுரேஷ், சூசை அந்தோணி உள்ளிட்ட 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை கிளிநொச்சி பகுதிக்கு கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர் அங்கு மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் இவர்கள் கடற்தொழிற் அமைச்சக அலுவலர்கள் மூலம் நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர். ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்ட படகுகளுக்கும் அதன் ஓட்டுநர்களுக்கும் பல லட்ச ரூபாய் அபராதம் விதிப்பதுடன், மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்வது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப்படும் நாளில் மேலும் 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றதன் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கும், தமிழக மீனவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.