வயநாடு: துப்பாக்கிச்சூட்டில் தப்பிய புலி, சடலமாக கண்டெடுப்பு - குழப்பத்தில் வனத்...
ஆங்கிலத்திலும் தயாராகும் ஜெயிலர் - 2!
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ஜெயிலர் - 2 படம் ஆங்கிலத்திலும் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சனுடன் ஜெயிலர் - 2 படத்தில் இணைந்துள்ளார். நீண்ட நாள்களாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு அண்மையில் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு விடியோவை வெளியிட்டது.
அதில், ரஜினியின் ஆக்ஷன் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருவதால் ஏப்ரல் மாதம் ரஜினி ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் இணைவார் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: மிஷ்கினை ஆள்வைத்து மிரட்டிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!
ஜெயிலர் - 2 படத்தின் படப்பிடிப்பை வெளி மாநிலங்களின் முக்கிய பகுதிகளில் நடத்த இயக்குநர் நெல்சன் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பான் இந்திய மொழிகளுடன் ஆங்கிலத்திலும் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், வெளிநாடுகளில் பல திரைகளில் இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.