செய்திகள் :

ஐஎஸ்பிஎல் சீசன் 2 கோலாகலத் தொடக்கம்

post image

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் (ஐஎஸ்பிஎல்) 2-ஆம் சீசன், மும்பையில் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பை, நடப்பு சாம்பியனான கொல்கத்தாவை வீழ்த்தியது.

டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடும் தெருவோரக் குழந்தைகளின் திறமையை வெளிக் கொணரும் வகையில், ஐஎஸ்பிஎல் போட்டி நடத்தப்படுகிறது. இத்தொடரில் சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, ஸ்ரீநகா் உள்ளிட்ட ஆறு நகரங்களின் அணிகள் கலந்துகொண்டுள்ளன.

இதன் தொடக்க விழா மும்பையில் உள்ள தானே தாதோஜி கொண்டதேவ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் ஐஎஸ்பிஎல் ஆட்சிமன்ற குழு உறுப்பினா்கள் சச்சின் டெண்டுல்கா், ஆசிஷ் செலாா், நடிகா்கள் அபிஷேக் பச்சன், சூா்யா, லீக் ஆணையா், அணிகளின் உரிமையாளா்கள் பங்கேற்றனா். நடிகை ஜாக்குலின் ஃபொ்னாண்டஸ், கிருஷ்ணா பலாக் முச்சல், நிகிதா காந்தி, நகாஸ் அசிஸ் ஆகியோரின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

மும்பை வெற்றி: பின்னா் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா-மும்பை அணிகள் மோதின. முதலில் விளையாடிய கொல்கத்தா டைகா்ஸ் 10 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 68 ரன்கள் எடுத்தது. மொய்தீன் 15, பவேஷ் 16 ரன்கள் சோ்த்தனா். மும்பை தரப்பில் அங்குா் சிங் 3, ராஜேந்திர சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா். பின்னா் ஆடிய மும்பை அணி 8 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 84 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கரண்மோா் 26, அமித் நாயக் 21 ரன்களை விளாசினா்.

நான் பயிற்சி பெற்ற நடிகர் அல்ல: கார்த்தி

தான் பயிற்சி பெற்ற நடிகர் இல்லை என்று நடிகர் கார்த்தி தெரிவித்தார்.சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கு 2025 திங்கள்கிழமை (ஜன. 27... மேலும் பார்க்க

2025-ல் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் தமிழ்ப் படங்கள்!

இந்தாண்டில் பல தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளன.காலம் மிக வேகமாக சென்றுகொண்டிருக்கிறது என்பது நமக்கும் நாம் பார்க்கும் திரைப்படங்களுக்கும் உள்ளே தொலைவுதான்போல. 2000 ஆம... மேலும் பார்க்க

சிம்புவின் அடுத்த படம்!

நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியச... மேலும் பார்க்க

தீபாவளி வெளியீடாக எஸ்கே - 23?

சிவகார்த்திகேயன் - ஏ. ஆர். முருகதாஸ் படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக ந... மேலும் பார்க்க

ரசிகர்களைக் கவர்ந்த எம்புரான் டீசர்!

நடிகர் மோகன்லாலின் எம்புரான் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்... மேலும் பார்க்க

சூர்யா - 45 அப்டேட்!

சூர்யா - 45 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்றத்தை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளத... மேலும் பார்க்க