செய்திகள் :

76-வது குடியரசு நாள் கொண்டாட்டம் - புகைப்படத் தொகுப்பு

post image
குடியரசு நாள் விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியேற்றினார். பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள், நாட்டின் உயர்நிலை ராணுவ அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியன்டோ பங்கேற்றார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றி வைத்ததும் வானில் ஹெலிகாப்டரில் மூலம் மலர்கள் தூவப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ராஜபாதையில் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது.
குடியரசு நாள் அணிவகுப்பில் பிரதமர் நரேந்திர மோடி உடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டின் உயர்நிலை ராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள்.
நாட்டின் 76-வது குடியரசு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
குடியரசு நாளையொட்டி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
குடியரசு நாளையொட்டி திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
கார்ப்ஸ் ஆஃப் சிக்னல்ஸ் மோட்டார்சைக்கிள் ரைடர் டிஸ்ப்ளே குழுவான, தி டேர் டெவில்ஸ்.
'திரிசூல்' வடிவத்தில் பறந்த இந்திய விமானப்படையின் மூன்று சு-30 விமானங்கள்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோ உள்ளிட்டோர்.
இந்திய இராணுவத்தின் கார்ப்ஸ் ஆஃப் சிக்னல்ஸின் மோட்டார் சைக்கிள் ரைடர் டிஸ்ப்ளே குழுவான டேர் டெவில்ஸ்.
கர்தவ்யா பாதையில் 76 வது குடியரசு நாள் அணிவகுப்பின் போது இந்திய விமானப்படையின் அணிவகுப்பு.
76 வது குடியரசு நாள் அணிவகுப்பின் போது புதுதில்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் இந்தோனேசிய ஆயுதப்படை இசைக்குழுவினர்.
கர்தவ்யா பாதையில் இந்திய இராணுவத்தின் குதிரைப்படை படைப்பிரிவு அணிவகுப்பு.
கர்தவ்யா பாதையில் இந்திய ராணுவத்தின் டாங்கிகள்.
கர்தவ்யா பாதையில் பி.எஸ்.எஃப் இன் ஒட்டக இசைக்குழுவினர்.
கர்தவ்யா பாதையில் ரயில்வே பாதுகாப்புப் படையின் அணிவகுப்பு.
குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளர் அணிவகுப்பு.
கர்தவ்யா பாதையில் காட்சிக்கு வைக்கப்பட்ட டிஆர்டிஓ-வின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி.
கர்தவ்யா பாதையில் கோவா மாநிலத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி.
கர்தவ்யா பாதையில் வலம் வந்த சமூக நீதி அமைச்சகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி.
கர்தவ்யா பாதையில் வலம் வந்த ஹரியானா மாநிலத்தின் சமூக நீதி அமைச்சகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி.
கர்தவ்யா பாதையில் வலம் வந்த ஆகாஷ் ராணுவ லாஞ்சர் ஊர்தி.
கர்தவ்யா பாதையில் வலம் வந்த போர்க்கள கண்காணிப்பு அமைப்பு ஊர்த்தி.
கர்தவ்யா பாதையில் வலம் வந்த பிரம்மோஸ் (மொபைல் லாஞ்சர்) அலங்கார அணிவகுப்பு ஊர்த்தி.
புவி அறிவியல் அமைச்சகத்தின் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் அலங்கார அணிவகுப்பு ஊர்த்தி.
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் அலங்கார அணிவகுப்பு அலங்கார அணிவகுப்பு ஊர்த்தி.
புவி அறிவியல் அமைச்சகத்தின் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் அலங்கார அணிவகுப்பு ஊர்த்தி.
பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்த்தி.
பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்த்தி.

நான் பயிற்சி பெற்ற நடிகர் அல்ல: கார்த்தி

தான் பயிற்சி பெற்ற நடிகர் இல்லை என்று நடிகர் கார்த்தி தெரிவித்தார்.சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கு 2025 திங்கள்கிழமை (ஜன. 27... மேலும் பார்க்க

2025-ல் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் தமிழ்ப் படங்கள்!

இந்தாண்டில் பல தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளன.காலம் மிக வேகமாக சென்றுகொண்டிருக்கிறது என்பது நமக்கும் நாம் பார்க்கும் திரைப்படங்களுக்கும் உள்ளே தொலைவுதான்போல. 2000 ஆம... மேலும் பார்க்க

சிம்புவின் அடுத்த படம்!

நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியச... மேலும் பார்க்க

தீபாவளி வெளியீடாக எஸ்கே - 23?

சிவகார்த்திகேயன் - ஏ. ஆர். முருகதாஸ் படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக ந... மேலும் பார்க்க

ரசிகர்களைக் கவர்ந்த எம்புரான் டீசர்!

நடிகர் மோகன்லாலின் எம்புரான் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்... மேலும் பார்க்க

சூர்யா - 45 அப்டேட்!

சூர்யா - 45 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்றத்தை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளத... மேலும் பார்க்க