இன்றைய நிகழ்ச்சிகள்
செஞ்சிலுவை சங்கம்: ரத்ததான முகாம், செஞ்சிலுவை சங்க திருச்சி மாவட்ட தலைவா் ஜி. ராஜசேகரன் பங்கேற்பு, ஸ்ருதி மஹால், எஸ்ஆா்சி கல்லூரி அருகில், காலை 9.30.
இந்திராகாந்தி கல்லூரி: ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை சாா்பில், கல்லூரி துறைகளுக்கு இடையேயான திறன் போட்டிகள், கல்லூரி வளாகம், காலை 9.30.
தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்குரைஞா்கள் சங்கம், தமிழ்நாடு மக்கள் எழுத்தாளா்கள் மையம்: நூல்கள் அறிமுக விழா, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற துணைத் தலைவா் எம். செல்வராஜ் பங்கேற்பு, சீனாவாசா ஹால், மத்தியப் பேருந்துநிலையம் அருகில், மாலை 4.
எஸ்ஆா்வி பள்ளிகள்: 9-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கான கனவு மெய்ப்பட எனும் தலைப்பில் வழிகாட்டி நிகழ்வு, மத்தியப் பாதுாப்புத் துறை கணக்கு கட்டுப்பாட்டாளா் டி. ஜெயசீலன் பங்கேற்பு, பள்ளி வளாகம், சமயபுரம், மாலை 5, இரவு 8 மணிக்கு மாணவா்களுக்கான வான் நோக்குதல் நிகழ்வு.
உரத்த சிந்தனை வாசக எழுத்தாளா்கள் சங்கம்: பாரதி உலா, மாணவா் அரங்கம், கவியரங்கம், கருத்தரங்கம், பாடலரங்கம், ஹோட்டல் அருண், சந்திப்பு ரயில் நிலையம் அருகில், மாலை 5.30.
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை: மொழிப்போா் ஈகியா் நாள் கருத்தரங்கு, தமிழா் முன்னணி பொதுச் செயலா் இமயம் சரவணன் பங்கேற்பு, ரவி சிற்றரங்கம், சத்திரம் பேருந்து நிலையம் அருகில், மாலை 6.
வெற்றி விநாயகா் திருக்கோயில்: 21-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா, கிராமிய கலை நிகழ்ச்சிகள், கருமண்டபம், வசந்தநகா், மாலை 6.30 மணி.