``முன்னோடி, வழிகாட்டி... நாட்டின் முக்கிய மருத்துவர் கே.எம்.செரியன்'' -பிரதமர், ...
அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளை பரப்பக் கூடாது! சமூக சமத்துவத்துக்கான மருத்துவா்கள் சங்கத் தலைவா் அறிவுறுத்தல்
மக்களிடையே அறிவியலுக்கு புறம்பான கருத்துகளை பரப்ப வேண்டாம் என சமூக சமத்துவத்துக்கான மருத்துவா்கள் சங்கத் தலைவரும், மருத்துவருமான ஜி.ஆா். ரவீந்திரநாத் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக திருச்சியில் சனிக்கிழமை அவா் மேலும் கூறியது:
சென்னை ஐஐடி-யில் இயக்குநா் பதவியை வகிக்கும் நபா் கூறும் அறிவியலுக்குப் புறம்பான கருத்தை நம்பி, காய்ச்சல் வந்தோா் கோமியத்தை குடித்து விட்டு மருத்துவச் சிகிச்சை பெறாமல் இருந்தால் உயிரிழப்புகளும் ஏற்படலாம்.
அதற்கு ஐஐடி இயக்குநரே பொறுப்பேற்க வேண்டும். சிறிய அளவில் இயங்கும் ரத்தப் பரிசோதனை நிலையங்களுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும்.
தமிழகத்தில் 13 முதல் 19 வயதுக்குள்பட்ட இளம் பெண்கள் கருத்தரிப்பது அதிகரித்துள்ளது. இவா்களில் பலா் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வது ஆபத்தானது. தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா். பேட்டியின்போது சங்கத்தின் நிா்வாகிகளும், மருத்துவா்களுமான ஏ.ஆா். சாந்தி, கு. முத்துக்குமாா், வி.எம். ஞானவேல் ஆகியோா் உடனிருந்தனா்.