செய்திகள் :

இந்த வாரம் உகந்த தேதி எது? துலாம் முதல் மீனம் வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்

post image

துலாம் ராசி அன்பர்களே!

வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

வேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சிப்பது பாதிப்பையே ஏற்படுத்தும். அலுவலகப் பணிகளிலும் கவனமாக இருப்பது அவசியம்.

வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்ற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

துலாம் ராசி

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்மணிகள் சில சலுகைகளைப் பெற வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நாள்கள்: 27,31

அதிர்ஷ்ட எண்கள்: 2,6

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி

குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்

பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே

விருச்சிகராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரியாகிவிடும். வீடு, மனை வாங்கவேண்டும் என்று நீண்டநாள்களாக நீங்கள் நினைத்தது இப்போது சாதகமாக முடியும். பழைய கடன்கள் தீருவதற்கு வாய்ப்பு உண்டு.

வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு.

வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யவும்.

விருச்சிகம்

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும்  வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். 

அதிர்ஷ்ட நாள்கள்: 28,29

அதிர்ஷ்ட எண்கள்: 1,7

வழிபடவேண்டிய தெய்வம்: ஆறுமுகப்பெருமான்.

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.  

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

தனுசுராசி அன்பர்களே!

பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் - மனைவி இடையில் சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அனுசரித்துச் செல்வது  நல்லது.  வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு வருத்தம் தெரிவிப்பார்கள். 

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.

வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.

தனுசு ராசி

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால்பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்படவும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 29, பிப் 2

அதிர்ஷ்ட எண்கள்: 2,5

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் 

பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் 

ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் 

காதலால் கூப்புவர் தம்கை 

மகரராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும்.  உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.

அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளை இந்த வாரம் மேற்கொண்டால் சாதகமாக முடியும்.

வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றி விரிவு படுத்துவீர்கள்.

மகரம்

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 30, பிப் 1

அதிர்ஷ்ட எண்கள்: 3,6

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை  ஆறங்கம் முதல்கற்ற கேள்வி 

வல்லார்கள் நால்வர்க்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய் 

எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து , காட்டிச் 

சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்

கும்பராசி அன்பர்களே!

வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்டநாளாக உங்களை வருத்திக்கொண்டிருந்த உடல் உபாதைகள் இனி குணமாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பேசும்போது பொறுமை தேவை.

அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது. 

வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கும்பம்

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 28,31

அதிர்ஷ்ட எண்கள்: 5,9

முக்கியக் குறிப்பு: இந்த வாரம் முழுவதும் ஆகிய முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை பாராயணம் செய்யவும்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி

அஞ்சிலே  ஒன்று பெற்ற அணங்கைகண்டு ; அயலான் ஊரில

அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன்  நம்மை அளித்து காப்பான் 

மீனராசி அன்பர்களே!

 பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம். ஒருசிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும். 

மீனம்

குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள் கூடும் என்பதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 29, பிப் 2

அதிர்ஷ்ட எண்கள்: 4,7

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!

வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! - நெஞ்சில்

ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!

முருகா என்று ஓதுவார் முன்!

இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் விருச்சிகம் வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்

மேஷராசி அன்பர்களே!பணவரவுக்கு குறைவிருக்காது. ஆனால், மனதில் தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்திலும் அலுவலகப் பணிகளிலும் கவனம் செலுத்தமுடியாது. மூத்த சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற... மேலும் பார்க்க

Weekly Horoscope: வார ராசி பலன் 26.1.25 முதல் 1.2.25 | Indha Vaara Rasi Palan | இந்த வாரம் எப்படி?

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். மேலும் பார்க்க

சந்திர தசை | மேஷம் முதல் மீனம் வரையிலான லக்ன பலன்கள் | Chandra Dasa | Bharathi Sridhar

ஒருவரின் வாழ்வில் சந்திரன் தசை எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை லக்ன அடிப்படையில் விளக்குகிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். மேலும் பார்க்க

இந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 26 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன்மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்தனுசுமகரம்கும்பம்மீனம் மேலும் பார்க்க