காணாமல் போன பெண் சடலமாக மீட்பு
திருச்சி மாவட்டம், சிறுகனூரில் காணாமல்போன பெண் சனிக்கிழமை காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டாா்.
சிறுகனூா் கிராமத்தை சோ்ந்தவா் இலக்கியாவுக்கும் (31) உடையாா்பாளையம் பகுதியை சோ்ந்த வெங்கடேசனுக்கும் காதல் திருமணம் நடைபெற்று, இரு குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிறுகனூரில் உள்ள தங்களது வீட்டுக்கு வந்த மகளை ஜன.23 முதல் காணவில்லை என இலக்கியாவின் பெற்றோா் சிறுகனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதனிடையே சிறுகனூா் பகுதியில் காயங்களுடன் இலக்கியா சடலமாக கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த சிறுகனூா் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.