செய்திகள் :

Vidaamuyarchi: ``ட்ரெய்லரிலேயே `விடாமுயற்சி' கதை இருக்கு..!'' - ரெஜினா சொல்லும் சீக்ரெட்

post image
அஜித்திடன் `விடாமுயற்சி' திரைப்படம் பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கிற இப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா கஸென்ட்ரா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இவர்களில் ரெஜினாவைச் சந்தித்து 'விடாமுயற்சி' தொடர்பாக பல விஷயங்கள் கேட்டோம்.

``படம் பார்த்துட்டு அஜித் சார் உங்களுடைய கதாபாத்திரம் பற்றிப் பேசியதாக சமீபத்திய பேட்டியில இயக்குநர் மகிழ் திருமேனி சொல்லியிருந்தரே...”

``அஜித் சார் கொடுத்த கமென்ட் எனக்கு மகிழ்ச்சியைத் தருது. இந்தக் கதாபாத்திரம் கிடைச்சதை எண்ணி சந்தோஷப்படுறேன். முக்கியமாக, மகிழ் சார் இயக்கத்துல நடிக்கிறதை ரொம்பவே என்ஜாய் பண்ணினேன். அவர் ஆக்டரின் டைரக்டர். என்னை டைரக்டரின் ஆக்டர்னு சொல்லலாம். சார் கொடுத்த அந்த கதாபாத்திரத்துக்கு என்னுடைய பெஸ்ட்டை வெளில கொண்டு வர்றதுக்கு நான் ரொம்பவே உழைச்சேன். நான் கதை கேட்கப்போகும்போது வேற ஒரு கதாபாத்திரத்தைதான் எனக்கு சொன்னாங்க. அதன் பிறகுதான் இப்போ நடிச்சிருக்கிற கதாபாத்திரம் பற்றி எனக்கு சொன்னாங்க.”

Regina - Vidamuyarchi

``அஜர்பைஜான்ல சண்டை காட்சிகள் ஷூட் பண்ற ப்ராசஸ் எப்படி இருந்தது?”

``என்னுடைய படங்களில் அதிகமாக ஆக்ஷன் இருக்கணும்னு விரும்புவேன். சொல்லப்போனால், அதிகமான ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் இருக்கு. எனக்கு ஆக்‌ஷன் ரொம்பவே பிடிக்கும். அதுனால ஸ்டன்ட் காட்சிகளை விரும்பி பண்றேன். ஃபீமேல் கதாபாத்திரங்களும் ஆக்ஷனில் ஒரு பங்காக இருப்பதை எண்ணி சந்தோஷப்படுறேன். அஜர்பைஜான்ல இருக்கிற பக்கு பகுதியில அதிகமாக குளிரும்னு சொன்னாங்க. அதுக்கேத்த மாதிரி ஆடைகள் தயார் பண்ணிக்கணும்னு சொல்லியிருந்தாங்க. நான் கொஞ்ச நாட்கள் கழிச்சுதான் அங்க போனேன். போனதும் முதல் காட்சியிலேயே குளிர்ல நடுங்க ஆரம்பிச்சுட்டேன். ஆனால், எனக்கு குளிர் பிடிக்கும்தான்!”

``ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்கிட்ட இருந்து என்னென்ன அனுபவங்கள் கிடைச்சது?”

``படத்துல அவர் எந்தளவுக்கு சிரத்தைக் கொடுத்து ஆக்‌ஷன் காட்சிகள்ல நடிக்கிறார்னு எல்லோருக்கும் தெரியும். ஒரு காட்சியில ஃபைடர்ஸ் எல்லோரும் தயாராகிட்டு இருந்தாங்க. அந்தக் காட்சியில அவர் சிங்கிள் டேக்ல நடிச்சு முடிச்சிட்டாரு. சுற்றி இருந்த எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தாங்க. திரையில பார்க்கிறதை தாண்டி நேர்ல அவர் ஆக்ஷன் காட்சிகளைப் பார்க்கிறது அவ்வளவு ரசிக்கும் வகையில இருந்தது.”

Regina - Vidamuyarchi

``த்ரிஷாவுடனான அனுபவங்கள் பற்றி சொல்லுங்க?”

``த்ரிஷா ரொம்பவே ஃபன்னான ஒரு நபர்.அவங்ககிட்ட நான் பல விஷயங்கள் கத்துக்கிட்டேன். இத்தனை வருட கரியர்ல பல தடைகளை உடைச்சிருக்காங்க. சொல்லப்போனால், ட்ரெய்லரிலேயே படத்தின் கதை முழுவதுமாக இருக்கு. படம் பார்த்ததுக்குப் பிறகு ட்ரெய்லரைப் பார்க்கும்போது கதை என்னனு புரிஞ்சுகுவீங்க. ட்ரெய்லரிலேயே படத்தினுடைய கதைக்கான க்ளூ இருக்கும். அதைப் பற்றி பலரும் பேசவே இல்ல. ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் சார் அற்புதமான வேலையை படத்திற்குக் கொடுத்திருக்கிறார். நான் அவருடைய பெரிய ஃபேன்”

``தவறை உடனடியா சரி செய்யற மிஷ்கினோட குணநலன் எல்லாருகிட்டயும் இருக்கணும்..'' - வெற்றிமாறன் பேச்சு

வெற்றிமாறன் உதவி இயக்குநர் வர்ஷா பரத் இயக்கி உள்ள படம் 'பேட் கேர்ள்'. இந்தப் படத்தில் ஹிருது ஹாரூன், சாந்தி பிரியா, அஞ்சலி சிவராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வெற்றிமாறனின் தயாரிப்பு நிற... மேலும் பார்க்க

Thalapathy 69: விஜய்யின் கடைசி படம் `ஜனநாயகன்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படும் அவரது 69-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது கே.வி.என் புரோடெக்சன் நிறுவனம். விஜய்யின் 69-வது படத்திற... மேலும் பார்க்க

``அலைப்பாயுதே படத்துக்கு என்னோட முதல் சாய்ஸ் ஷாருக்கான் -கஜோல் தான்'' -சீக்ரெட் பகிரும் மணிரத்னம்

இயக்குநர் மணிரத்னத்தின் 'அலைபாயுதே' பிளாக்பஸ்டர் ஹிட் என்பதை தாண்டி, அது ஒரு 'எவர்கிரீன் ஹிட்' என்றே சொல்லலாம். இப்போது வரை அந்தப் படத்தின் புரோபோசல் சீன் முதல் பாட்டுகள் வரை டிரெண்டில் உள்ளது. இந்தப்... மேலும் பார்க்க

Mr House Keeping Review: 90ஸ் கிட்ஸ் கொண்டாடும் வெற்றியா, ஏமாற்றமா?

2019-ல் கல்லூரியில் இசையை (லாஸ்லியா) துரத்தித் துரத்திக் காதலிக்கிறார் ஹானஸ்ட் ராஜ் (ஹரி பாஸ்கர்). ஆனால், அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் நிராகரிக்கிறார் இசை. விரக்தியடையும் ஹானஸ்ட் ராஜ், மொத்தக் கல்ல... மேலும் பார்க்க

Kollywood 2025 : `ஒன்லி வீச்சுதான்!' - 2025-ல் வெளியாகவுள்ள பெரிய படங்களின் ரிலீஸ் டேட் விவரங்கள்!

இந்தாண்டு வெளியாகவிருக்கும் பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களின் ரிலீஸ் தேதி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது.பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களுக்கு எப்போதும் அதிகப்படியான எதிர்பார்பு நிலவும். அப்படியா... மேலும் பார்க்க