செய்திகள் :

மகா கும்பமேளாவில் புனித நீராடிய அகிலேஷ் யாதவ்!

post image

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று (ஜன. 26) கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

இந்தியா கூட்டணிக் கட்சியில் இருந்து, தலைவர் ஒருவர் கும்பமேளாவில் பங்கேற்றுள்ளது இதுவே முதல்முறை.

பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதிமுதல் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தா்கள் தினமும் புனித நீராடி வருகின்றனா்.

அந்தவகையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். அவருடன் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

இந்தியா கூட்டணியில் இருந்து மகா கும்பமேளாவில் பங்கேற்ற முதல் தலைவராக அகிலேஷ் யாதவ் மாறியுள்ளார். இவரைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்களும் மகா கும்பமேளாவில் பங்கேற்பார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்தில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பிரயாக்ராஜுக்கு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. அவர்கள், பிப்ரவரி முதல் வாரத்தில் மகா கும்பமேளாவுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை காங்கிரஸ் கட்சியிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

தற்போது இந்தியா கூட்டணியில் இருந்து அகிலேஷ் யாதவ் கும்பமேளாவில் பங்கேற்றுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அகிலேஷ் யாதவுக்கு் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லி: பையில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல்; இருவர் கைது

புது தில்லி: கிழக்கு தில்லியின் காஸிபுர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து நேரிட்ட இடத்தில், பை ஒன்றில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் பார்க்க

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்!

சென்னை:தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2025இன்று (ஜன. 27) தொடங்கியது. சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் இருநாள்கள் நடைபெறும் இந்த அரங... மேலும் பார்க்க

உத்தரகாசியில் தீ விபத்தில் 10 வீடுகள் எரிந்து நாசம், ஒருவர் பலி

உத்தரகாசியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வீடுகள் எரிந்து நாசமாயின. ஒருவர் பலியானார். உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சவானி கிராமத்தின் மோரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட... மேலும் பார்க்க

தெலங்கானாவில் 6,000 ஆண்டுகள் பழமையான கல் கோடாரி கண்டெடுப்பு!

தெலங்கானா மாநிலத்தில் 6,000 ஆண்டுகள் பழமையான கல் கோடாரி கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள குந்திரம்பள்ளி கிராமத்தில் கி.மு. 4000 ஆண்டிற்கு முந்தைய காலத்தில் செய்யப்பட்ட... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா், குஜராத் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இருவா் கைது

ஜம்மு-காஷ்மீா், குஜராத் எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற இருவா் கைது செய்யப்பட்டனா். இது தொடா்பாக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தரப்பில் கூறப்பட்டதாவது: குஜராத் ம... மேலும் பார்க்க

வெளியுறவுச் செயலா் மிஸ்ரி சீனா பயணம்

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஞாயிற்றுக்கிழமை சீனா சென்றாா். கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே கடு... மேலும் பார்க்க