Bigg Boss Rayan: ``செளந்தர்யாவுக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப் பற்றிய கமென்ட்ஸ்'' -...
வரலாற்றில் உரிமைகளைவிட கடமை உணர்வு அதிகம்: நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கு 2025 திங்கள்கிழமை காலை தொடங்கியது.
இந்த நிகழ்வை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியுமான வெ. ராமசுப்பிரமணியன், இந்தியா்களின் உரிமைகள், கடமைகளில் சமநிலையுடன் செயல்படுவது குறித்து சிறப்புரையாற்றினார்.
இந்த அமர்வுக்கு தலைமை வகித்த தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேசியதாவது:
“சிலர் வழக்குரைஞர்களுக்கான வழக்குரைஞராக இருப்பர். ஆனால், நீதிபதிகளுக்கான நீதிபதி ராம சுப்பிரமணியன். முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளில் ராம சுப்பிரமணியன் பங்களிப்பு முக்கியமானது.
அவரை நீதிபதி என மட்டும் அறிமுகம் செய்ய முடியாது. அவர் சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் நிபுணத்துவம் பெற்றவர். தினமணி மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கும் ராம சுப்பிரமணியனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
தினமணியில் சொல் வேட்டை என்ற தொடர் மூலம் தமிழுக்கு 52 சொற்களைக் கொடுத்துள்ளார். அவர் ஏன் தொடர்ந்து அதை எழுதவில்லை எனப் பலர் என்னிடம் கேட்பதுண்டு. அந்த அளவுக்கு தமிழ் மொழியில் புலமை பெற்றவர் ராமசுப்பிரமணியம்” எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க : தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்!
இதனைத் தொடர்ந்து ராம சுப்பிரமணியன் பேசியதாவது:
தமிழ் கலாசாரத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே கடமைகளைப் பற்றிதான் குறிப்பிடப்பட்டுள்ளது. புறநானூரில் கடமைகள் பற்றி பெண் கவிஞர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே, சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே, வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே’ என்று கடமைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இதனால், வரலாற்று ரீதியாக பார்க்கும்போது சமூகத்தில் உரிமைகளை விட கடமை உணர்வு அதிகம் இருந்துள்ளது.
19 வது நூற்றாண்டுக்கு முன்பு, முதல் நவீன அரசியலமைப்பானது தனிநபர்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை இணைத்தது. 1795 ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசியலமைப்பில் சட்டத்தை மதிப்பது குடிமகனின் கடமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சிறந்த தந்தையாகவும் மகனாகவும் நண்பராகவும் கணவராகவும் இருக்க வேண்டுமென்பது கடமையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1946 முதல் 1948 வரை வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டுகள். இந்த காலகட்டத்தில்தான் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய போகோடா பிரகடனம் வரையறை செய்யப்பட்டது. இந்தியாவின் அரசியலமைப்பு உருவாக்குவதற்கான நடவடிக்கைகளும் அப்போதுதான் நடந்தது.
உலகளவில் கடமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது மையமாக தற்போது மாறியுள்ளது. கடமைகள் பொறுப்பாக மாற்றப்பட்டுள்ளது.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு சவால்களை சந்தித்து வருகின்றது. முதலாவது, உலகளாவிய மனித உரிமைகள் ஆணையம் வழங்கும் அங்கீகாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்டுள்ளது. அங்கீகாரம் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இரண்டாவது, இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் அரசு, அரசு சாரா நிறுவனங்களின் செல்வாக்கிற்கு மத்தியில் மனித உரிமைகளை அமல்படுத்துவது சவாலாக உள்ளது” என்றார்.