Bigg Boss Rayan: ``செளந்தர்யாவுக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப் பற்றிய கமென்ட்ஸ்'' -...
மாங்காடு அரசு நிலத்தில் ஆக்ரமிப்பு வீடுகள் அகற்றம்: மக்கள் எதிர்ப்பு
சென்னை: சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில், அரசு நிலத்தை ஆக்ரமித்துக் கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றப்பட்டுவருகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆக்ரமிப்புகளை அகற்றுவதை எதிர்த்துப் போராடிய பெண்கள் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்து வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.
40 ஆண்டுகளாக இப்பகுதியில் நாங்கள் வாழ்ந்து வருவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
மாங்காட்டில் அரசு நிலத்தில் ஆக்ரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை குன்றத்தூர் வட்டாட்சியர், மாங்காடு நகராட்சி ஆணையர், காவல்துறை முன்னிலையில் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.