மகா கும்பமேளா: நாளை பிரயாக்ராஜ் செல்கிறார் அமித்ஷா
பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை புனித நீராடவுள்ளார்.
இதுகுறித்து மகா கும்பமேளா நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது, அமித் ஷா திங்கள்கிழமை காலை 11:25 மணிக்கு பிரயாக்ராஜுக்கு வருகை தருகிறார். தொடர்ந்து அவர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்.
பின்னர் அவர் படே ஹனுமான் ஜி கோயில் மற்றும் அபய்வத்தை பார்வையிடுவார். பின்னர், ஜூனா அகாராவுக்குச் சென்று மதிய உணவு சாப்பிடுவார்.
அவரது அட்டவணையில் குரு சரணானந்த் ஜியின் ஆசிரமத்திற்குச் செல்வதும் அடங்கும். அங்கு அவர் குரு சரணானந்த் ஜி மற்றும் கோவிந்த் கிரி ஜி மகராஜ் ஆகியோரைச் சந்திக்கிறார். மாலையில் பிரயாக்ராஜில் இருந்து அமித்ஷா தில்லி புறப்பட்டு செல்வார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய ஆன்மிக சங்கமமாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி (பெளஷ பெளா்ணமி) தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
சிபிஐ விசாரணை வேங்கைவயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது: விஜய்
இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனா்.
மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 26 வரை நடைபெறும் மகா கும்பமேளாவில் மொத்தம் 40 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதையொட்டி, பக்தா்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்தை நிா்வகிக்க மாநில அரசு சாா்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே மகா கும்பமேளாவில் ரஷியா, உக்ரைன் உள்ளிட்ட 73 நாடுகளின் தூதா்களும், பிப்.1-ஆம் தேதி புனித நீராடவுள்ளனா்.