புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க...
பிற நாடுகளின் நாடாளுமன்றத்தில் மோடி செலவிட்ட நேரமே அதிகம்: சசி தரூர்
இந்திய நாடாளுமன்றத்தைவிட பிற நாடுகளின் நாடாளுமன்றத்தில் மோடி செலவிட்ட நேரம் அதிகம் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கு 2025 திங்கள்கிழமை காலை தொடங்கியது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான சசி தரூர், இந்திய நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார்.
இதையும் படிக்க : வரலாற்றில் உரிமைகளைவிட கடமை உணர்வு அதிகம்: நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்
அவர் பேசியதாவது:
“ஜனநாயக நாட்டில் மக்களின் நலனுக்கும் அவர்களின் விருப்பத்துக்கும் மட்டுமே முக்கியம் கொடுக்கப்பட்டுவந்தது. ஆனால், தற்போது அது இல்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு முன்புவரை, எதிர்க்கட்சிகளுடன் பேசுவதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ஒருபோதும் தயங்கியதில்லை.
நான் அமைச்சராக இருந்தபோது பாஜக எம்.பி.க்கள் அல்லது அமைச்சர்களுடன் எந்த அழைப்பையும் நான் நிராகரித்ததில்லை. இன்று அழைப்புகளே இல்லை.
இந்திய நாடாளுமன்றத்தில் செலவிடும் நேரத்தைவிட பிற நாடுகளின் நாடாளுமன்றத்தில் அதிக நேரத்தை பிரதமர் நரேந்திர மோடி செலவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஒருவரைஒருவர் எதிரிகளாக பார்ப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல” எனக் குறிப்பிட்டார்.