புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க...
பழனி முருகன் கோயிலில் 3 நாள்கள் கட்டணமில்லா தரிசனம்! - அமைச்சர் அறிவிப்பு
பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி 3 நாள்களுக்கு கட்டணமில்லா தரிசனம் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.
தைப்பூச நாளன்று தமிழகம் முழுவது உள்ள முருகன் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். அன்று முருகன் கோயில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காக 3 நாள்கள் கட்டணமில்லா தரிசனம் செய்யலாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
வருகிற பிப். 11 ஆம் தேதி தைப்பூசம் வருவதையொட்டி பிப். 10, 11, 12 ஆகிய மூன்று நாள்கள் பழனி கோயிலில் கட்டணமின்றி தரிசனம் எனவும் திருவிழாவுக்கு வரும் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்களின் வசதிக்காக நகரில் கட்டணமில்லா பேருந்து இயக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.