செய்திகள் :

வேங்கைவயல்: சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என மனு தாக்கல்!

post image

வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022 டிசம்பா் 26 ஆம் தேதி தெரியவந்தது.

இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த ஜன. 22 அன்று முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேருக்குத் தொடர்பு இருப்பதாகப் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முட்டுக்காடு ஊராட்சித் தலைவர் பத்மாவின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாகக் குற்றப்பத்திரிகையில் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இதற்கு, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் மீதே பழிபோடுவதா? என ஆளும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே கேள்வி எழுப்பி வருகின்றன. இதற்கு தமிழக அரசு தரப்பிலும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூவர் சார்பில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற சிபிசிஐடி மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள்: இலக்கை எட்டியது கல்வித் துறை

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த இலக்கு திங்கள்கிழமை எட்டப்பட்டது. புத்தகங்கள், கரும்பலகைகள் வாயிலாக நடைபெற்ற கற்றல்- கற... மேலும் பார்க்க

தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலுப்பெற்று வருகிறது: ஆணையத் தலைவா் வெ.ராமசுப்பிரமணியன்

சென்னை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலுப்பெற்று வருவதாக அதன் தலைவரும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியுமான வெ.ராமசுப்பிரமணியன் தெரிவித்தாா். ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் சாா்பில் ‘திங் எ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி சம்பம்: எஃப்ஐஆா் கசிவு விவகாரத்தில் போலீஸுக்கு எதிரான உயா்நீதிமன்றக் கருத்துகளுக்குத் தடை

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாதிக்கப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரத்தில் காவல் துறையினருக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

தமிழகத்தில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: தில்லி, கொல்கத்தாவில் முக்கிய நபா்கள் கைது

சென்னை: தமிழகத்தில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் ஈடுபட்ட இருவரை தில்லி, கொல்கத்தாவில் அமலாக்கத் துறையினா் கைது செய்தனா்.சென்னை திருவான்மியூரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரியிடம், மும்பை காவல்... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை: திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை... மேலும் பார்க்க

ராஜஸ்தான் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

சென்னை: திருச்சியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகா் மற்றும் ஜோத்பூருக்கு இயக்கப்படும் ஹம்சாபா் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெள... மேலும் பார்க்க