Bigg Boss Rayan: ``செளந்தர்யாவுக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப் பற்றிய கமென்ட்ஸ்'' -...
2025-ல் முதல் முறையாக.. வீராணம் ஏரி நிரம்பியது!
சிதம்பரம்: கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வீராணம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பால் இந்த ஆண்டில் முதல் முறையாக அதன் முழுக் கொள்ளளவான 47.50 அடியை எட்டியது.
குடிநீர்த் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு விநாடிக்கு 74 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னாா்கோயிலில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீா் வருகிறது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடி ஆகும். அதாவது 1,465 மில்லியன் கன அடி தண்ணீா் தேக்கப்படுகிறது.
ஏரியின் மூலம் 44,456 ஏக்கா் விளை நிலங்கள் பாசனம் வசதி பெறுகின்றன. ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்காக நாள்தோறும் 74 கன அடி அனுப்பப்படுகிறது.
மழைக் காலங்களில் மிகப்பெரிய வடிகாலாகவும் இந்த ஏரி அமைந்துள்ளது. மழைக்காலங்களில் வெள்ளியங்கால் மதகு வழியாக வெள்ளியங்கால் ஓடையில் உபரி நீா் வெளியேற்றப்படுவது வழக்கம்.