புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க...
விண்வெளியிலிருந்து மகா கும்பமேளா: புகைப்படங்களை வெளியிட்ட நாசா வீரர்!
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட மகா கும்பமேளா புகைப்படங்களை நாசா விண்வெளி வீரர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதிமுதல் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தா்கள் தினமும் வந்து புனித நீராடி வருகின்றனா்.
இந்த நிலையில் , விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாசா விண்வெளி வீரரான டான் பெட்டிட் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க | தெலங்கானாவில் 6,000 ஆண்டுகள் பழமையான கல் கோடாரி கண்டெடுப்பு!
அந்தப் பதிவில், ”2025 மகா கும்பமேளா இரவில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து கங்கை நதி யாத்திரை. உலகில் அதிகளவில் மனிதர்கள் கூடும் இந்த விழா நன்றாக ஒளிர்கிறது” என்று குறிப்பிட்டு இரு புகைப்படங்களிப் பகிர்ந்தார்.
இதன் மூலம், கோடிக்கணக்கான மக்கள் வந்து செல்லும் விழா சர்வதேச அளவில் வைரலாகியுள்ளது