'நான் ஆணையிட்டால்...’ ஜன நாயகன் 2-வது போஸ்டர்!
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது.
நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: அரசியலுக்கு வருகிறாரா த்ரிஷா?
விஜய் 69-வது படத்தின் பெயர் ’ஜன நாயகன்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் போஸ்டர் இன்று காலை வெளியான நிலையில், தற்போது ’நான் ஆணையிட்டால்..’ என்கிற வாசகத்துடன் 2-வது போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.