மேற்கு வங்கத்தில் ரயிலின் 2 காலி பெட்டிகள் தடம் புரண்டன
மேற்கு வங்கத்தில் பார்சல் வேன் மோதியதில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 காலிப் பெட்டிகள் தடம் புரண்டன.
மேற்கு வங்க மாநிலம், ஹவுரா மாவட்டத்தின் பத்மபுகுர் ரயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலின் காலிப் பெட்டிகள் பத்மபுகூரில் இருந்து ஷாலிமார் யார்டுக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்டது.
அப்போது அந்த ரயில் பெட்டிகள் மீது பார்சல் வேன் திடீரென மோதியது. இந்த சம்பவத்தில் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
பிரமிக்க வைத்த குடியரசு நாள் அலங்கார ஊர்திகள்!
இதனால் ஷாலிமார்-சந்த்ராகாச்சி தடத்தில் 20 நிமிடங்கள் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தண்டவாளத்தை சீரமைத்து, ரயில் போக்குவரத்தை முழுமையாக செயல்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பார்சல் வேன் ஏன் ரயில் செல்லும் பாதையில் சென்றது என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இருப்பினும் இந்த விபத்தில் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று தென்கிழக்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.